இந்திய அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் ஜஸ்ப்ரித் பும்ரா. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் ஆடியபோது முதுகில் காயம் ஏற்பட்டது.
முதுகு காயம் காரணமாக 6 மாதங்களாக எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடாமல் காயத்திலிருந்து மீண்டுவரும் பும்ரா, இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டெஸ்ட் தொடரிலும் ஆடவில்லை. அதைத்தொடர்ந்து நடக்கும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும் பும்ரா இடம்பெறவில்லை.
பும்ரா காயத்திலிருந்து மீண்டு மீண்டும் கிரிக்கெட் ஆட இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்பதால் அவர் ஐபிஎல்லில் ஆடுவது சந்தேகம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு நடக்கவுள்ள ஒருநாள் உலக கோப்பையில் பும்ரா இந்திய அணியில் ஆடுவது முக்கியம். எனவே அவரை அவசரப்பட்டு ஐபிஎல்லில் ஆடவைப்பது ரிஸ்க் என்பதால் அவர் ஐபிஎல்லில் ஆட வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 16வது சீசன் வரும் மார்ச் 31ம் தேதி தொடங்குகிறது. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கியமான வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா. அவர் தான் அந்த அணியின் மிகப்பெரிய மேட்ச் வின்னர். குறைவான ஸ்கோரை அடித்துவிட்டு, அதை வைத்து மும்பை இந்தியன்ஸ் அணி எதிரணியை சுருட்டி வெற்றி பெற காரணமே பும்ரா தான். டெத் ஓவர்களில் டைட்டாக வீசி ரன்னே கொடுக்காமல் வெற்றியை மும்பை இந்தியன்ஸுக்கு பெற்று கொடுக்கும் மேட்ச் வின்னர் பும்ரா. அவர் ஆடவில்லை என்றால் அது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும்.
IND vs AUS: எங்க மண்ணுல நாங்க தான்டா கெத்து..! நீங்க ஒயிட்வாஷ் ஆவது உறுதி.. ஆஸ்திரேலியாவை அலறவிடும் தாதா
மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள சமகாலத்தின் மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர்களான பும்ராவும் ஆர்ச்சரும் இணைந்து பந்துவீசுவதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருந்த நிலையில், பும்ரா இந்த சீசனில் ஆடாதது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மட்டுமல்லாது ரசிகர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த சீசனில் பும்ராவிற்கு பதிலாக ஆர்ச்சரை ஆயுதமாக பயன்படுத்தி அசத்தும்.