வந்தா ராஜாவாத்தான் வருவேன் என்கிற மாதிரி டேரக்டா உலகக் கோப்பையை குறி வைத்த பும்ரா!

Published : Feb 27, 2023, 01:06 PM IST

ஐபிஎல் மற்றும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பும்ரா விளையாடமாட்டார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  

PREV
15
வந்தா ராஜாவாத்தான் வருவேன் என்கிற மாதிரி டேரக்டா உலகக் கோப்பையை குறி வைத்த பும்ரா!
ஜஸ்ப்ரித் பும்ரா

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா காயம் காரணமாக கடந்த ஆண்டு நடந்த பல்வேறு தொடர்களில் அவர் பங்கேற்கவில்லை. அதுமட்டுமின்றி ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னதாக அந்த தொடரிலிருந்து விலகினார்.
 

25
ஜஸ்ப்ரித் பும்ரா

இதைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பும்ரா தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிரான தொடரில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு அந்த தொடரிலிருந்து அவர் நீக்கப்பட்டார். மேலும், நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை.
 

35
ஜஸ்ப்ரித் பும்ரா - ஆசிய கோப்பை

தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரிலும் பும்ரா இடம் பெறவில்லை. இந்த நிலையில், வரும் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கும் 16ஆவது ஐபிஎல் சீசனில் ஜஸ்ப்ரித் பும்ரா பங்கேற்கமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பும்ராவிற்கு காயம் அதிகளவில் இருக்கும் நிலையில் அவர் ஐபிஎல் தொடரில் விளையாட பிசிசிஐயின் மருத்துவக் குழு அவருக்கு அனுமதி வழங்கவில்லை. 
 

45
ஜஸ்ப்ரித் பும்ரா - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி

ஐபிஎல் தொடரைத் தொடர்ந்து வரும் ஜூன் மாதம் லண்டனில் நடக்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் பும்ரா விளையாடமாட்டார் என்று கூறப்படுகிறது. பும்ராவிற்கு ஏற்பட்ட காயம் குணமடைய இன்னும் ஒரு சில மாதங்கள் ஆகும் நிலையில், அவர் நேரடியாக வரும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடக்கும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது.
 

55
ஜஸ்ப்ரித் பும்ரா - ஐபிஎல்

ஐபிஎல் தொடரில் பும்ரா விளையாட மாட்டார் என்ற செய்தி அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனினும், மும்பை இந்தியன்ஸ் அணி பும்ராவை விளையாட வைக்க ஆர்வம் காட்டி வருகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories