IPL 2024 Auctioneer: முதல் முறையாக ஐபிஎல் 2024 ஏலத்தை நடத்தும் மல்லிகா சாகர்!

Published : Dec 05, 2023, 08:08 PM IST

துபாயில் நடக்க இருக்கும் ஐபிஎல் மினி ஏலத்தை மும்பையைச் சேர்ந்த மல்லிகா சாகர் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

PREV
18
IPL 2024 Auctioneer: முதல் முறையாக ஐபிஎல் 2024 ஏலத்தை நடத்தும் மல்லிகா சாகர்!
Mallika Sagar

உலகக் கோப்பை தொடர் முடிந்த நிலையில், ஐபிஎல் தொடருக்காக ஒவ்வொரு வீரரும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். வரும் 19 ஆம் தேதி முதல் முறையாக துபாயில் ஐபிஎல் 2024 ஏலம் நடக்க இருக்கிறது. இதற்கு முன்னதாக 16 சீசன்களும் இந்தியாவில் நடத்தப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

28
IPL Auction 19th December

இந்த ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு அணியிலும் தக்க வைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதுதவிர இந்த ஏலத்திற்கு மொத்தமாக 1166 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்து வைத்துள்ளனர். இதில் 830 இந்திய வீரர்களும், 336 வெளிநாட்டு வீரர்களும் பதிவு செய்துள்ளனர்.

38
IPL 2024 Auction

ஆனால், இந்த ஏலத்தில் மொத்தமே 77 வீரர்கள் மட்டுமே ஏலம் எடுக்கப்பட இருக்கின்றனர். இதில், 30 வெளிநாட்டு வீரர்களும், 47 இந்திய வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். ஆனால், எந்த அணி யாரை ஏலத்தில் எடுக்கப்பட இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

48
IPL Auction 2024

ஏற்கனவே டிரேட் முறையில் சில வீரர்கள் அணிகளுக்கு இடையில் மாற்றப்பட்டுள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்த கேமரூன் க்ரீன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

58
Indian Premier League

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். இதே போன்று தேவ்தத் படிக்கல் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கும், ஆவேஷ் கான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த ஐபிஎல் ஏலத்தை இந்தியாவைச் சேர்ந்த மல்லிகா சாகர் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

68
Mallika Sagar

அதற்கு முக்கிய காரணம், 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தின் போது வணிந்து ஹசரங்காவை ஏலம் விட்ட போது ஏலத்தை நடத்திய ஹூஜ் எட்மெடாஸ் மயங்கி விழுந்தார். இதையடுத்து, சாரு சர்மா ஏலத்தை நடத்தினார். இதையடுத்து கடந்த ஆண்டு ஏலத்தை ஹூஜ் எட்மெடாஸ் நடத்தினார்.

78
IPL 2024 Players List

இந்த நிலையில் தான் இந்த ஆண்டு வரும் 19 ஆம் தேதி துபாயில் நடக்க இருக்கும் ஐபிஎல் 2024 மினி ஏலத்தை மும்பையைச் சேர்ந்த மல்லிகா சாகர் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர், இதற்கு முன்னதாக மகளிர் பிரீமியர் லீக்கின் முதல் சீசன் ஏலத்தை நடத்தியுள்ளார்.

88
IPL Players List

2021 ஆம் ஆண்டு முதல் புரோ கபடி லீக் ஏலத்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில் தான் முதல் முறையாக ஆண்களுக்கான ஐபிஎல் 2024 மினி ஏலத்தை நடத்தும் மல்லிகா சாகர் ஒரு பெண்ணாக சாதனை படைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories