Gerald Coetzee Wedding Photos: ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக காதலியை கரம் பிடித்த கெரால்டு கோட்ஸி!

First Published | Dec 5, 2023, 2:15 PM IST

தென் ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளரான கெரால்டு கோட்ஸி தனது நீண்டநாள் காதலியான ஹன்னா ஹாத்தோர்னை கரம் பிடித்த புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Gerald Coetzee Wife

இந்தியாவில் நடந்த 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பையில் 8 இன்னிங்ஸில் விளையாடி 20 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் கெரால்டு கோட்ஸி. இவர், ஆண்ட்ரிச் நோட்ஜேவுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்குப் பதிலாக உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்று 20 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

Gerald Coetzee

உலகக் கோப்பையில் சிறப்பாக பந்து வீசியதைத் தொடர்ந்து, வரும் 2024 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் ஏலத்திற்கு தனது பெயரை பதிவு செய்துள்ளார். இந்த ஐபிஎல் ஏலத்திற்கு தனது அடிப்படை விலையை ரூ.2 கோடியாக நிர்ணயித்துள்ளார். உலகக் கோப்பையில் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அல்லது மும்பை இந்தியனஸ் அணியில் கெரால்டு கோட்ஸி இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tap to resize

Hannah Hathorn

இதுவரையில் 14 ஒருநாள் கிரிக்கெட், 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கெரால்டு கோட்ஸி 43 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இந்த நிலையில் தான், தனது நீண்டநாள் காதலியான ஹன்னா ஹாத்தோர்னை திருமணம் செய்து கொண்டார்.

Gerald Coetzee Hannah Hathorn Wedding

கடந்த நவம்பர் 29 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவின் ஹெல்டர்ஸ்ட்ரூமில் உள்ள எலாண்ட்ஸ்க்லூஃப் ஃபார்மில் கோட்ஸி ஹன்னா திருமணம் நடந்துள்ளது. இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Latest Videos

click me!