Michaung Cyclone Chennai
மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் மாலை முதல் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
Michaung Cyclone Chennai
இதன் காரணமாக கிண்டி, கேகே நகர், எழும்பூர், மாம்பலம், வேளச்சேரி, அண்ணா நகர், ஆதம்பாக்கம், பரங்கிமலை, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை என்று நகரின் பெரும்பகுதி வெள்ளம் சூழ்ந்தது.
Cyclone Michaung
மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. செல்போன் சிக்னலும் முடங்கியது. ரயில் சேவை மற்றும் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. ஒரே இரவில் சென்னையே தலைகீழாக காணப்பட்டது.
Cyclone Michaung
இந்த நிலையில், மிக்ஜம் புயல் குறித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
Michaung
அதில், அவர் கூறியிருப்பதாவது: சென்னையின் பல பகுதிகளை வெள்ளம் பாதித்துள்ளது குறித்து நான் ஆழ்ந்த கவலையடைகிறேன். இந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருப்பது முக்கியம், தேவைப்பட்டால் உயரமான இடங்களுக்கு செல்லுங்கள்.
Cyclone Michaung
நீங்கள் உதவக்கூடிய நிலையில் இருந்தால், தேவைப்படுவோருக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள், நம்மால் முடிந்தவரை பாதிக்கப்பட்டவர்களுகு ஆதரவளிக்க ஒன்றுபடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
Cyclone Michaung In Chennai
சென்னை மட்டுமின்றி சென்னை ரசிகர்கள் மீது அதிக அன்பும், பற்றும் கொண்டவராக இருப்பவர் டேவிட் வார்னர். சென்னையில் கிரிக்கெட் விளையாடுவதை அதிகளவில் விரும்பக் கூடியவர். இந்த நிலையில் தான், சென்னை மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.