சுனில் நரைன் முதல் ஷாகிப் அல் ஹசன் வரை – டி20ல் அதிக மெய்டன் வீசிய பவுலர்ஸ் – பும்ரா, புவிக்கு இடம்!

First Published Sep 16, 2024, 2:56 PM IST

Most Maiden Overs in T20 Cricket: T20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசிய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் சுனில் நரைன் முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரான முகமது அமீர், இந்திய ஸ்விங் பவுலரான புவனேஷ்வர் குமாரை ஓவர்டேக் செய்துள்ளார். இந்தப் பட்டியலில் ஜஸ்ப்ரித் பும்ராவும் இடம் பெற்றிருக்கிறார்.

Bowlers with most maiden overs in T20 cricket

டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசிய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் முதலிடத்தில் உள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலு இவரது பங்களிப்பு அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

T20 Cricket

இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரான முகமது அமீர், இந்திய ஸ்விங் பவுலரான புவனேஷ்வர் குமாரை ஓவர்டேக் செய்துள்ளார். CPL இல் விளையாடி, அமீர் 25 மெய்டன் ஓவர்கள் வீசினார். T20 கிரிக்கெட்டில் அதிக மெய்டன் ஓவர்கள் பட்டியலில் அமீர் ஆவது இடத்தைப் பிடித்தார். பட்டியலில் உள்ள வேறு சில பந்து வீச்சாளர்கள் யார் என்று பார்க்கலாம் வாங்க…

Latest Videos


Sunil Narine

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பவுலரான சுனில் நரைன் 30 மெய்டன் ஓவர்கள் வீசி முதலிடம் பிடித்துள்ளார். இவரைத் தொடர்ந்து வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் 26 மெய்டன் ஓவர்கள் வீசி 2ஆவது இடம் பிடித்துள்ளார். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் 25 மெய்டன் ஒவர்கள் உடன் 3ஆவது இடத்திலும், புவனேஷ்வர் குமார் 4ஆவது இடத்திலும் இருக்கின்றனர். புவி 24 மெய்டன் ஓவர்கள் வீசியுள்ளார். இவருக்கு டி20 கிரிக்கெட்டில் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்திருந்தால் மேலும் அதிக மெய்டன் ஓவர்கள் வீசியிருப்பார்.

Shakib al Hasan

ஜஸ்ப்ரித் பும்ரா 21, வஹாப் ரியாஸ் 21, முகமது இர்பான் 20 என்று அடுத்தடுத்து மெய்டன் ஓவர்கள் வீசி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதுவரையில் 51 டி20 போட்டிகளில் விளையாடிய சுனில் நரைன் 30 மெய்டன் ஓவர்கள் வீசி 52 விக்கெட்டுகள் கைப்பற்றியதோடு 1105 ரன்கள் எடுத்துள்ளார்.

வங்கதேச ஆல் ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன் 129 டி20 போட்டிகளில் 127 இன்னிங்ஸ் விளையாடி 149 விக்கெட்டுகள் கைப்பற்றியதோடு 26 மெய்டன் ஓவர்கள் வீசியுள்ளார். மொத்தமாக டி20 கிரிக்கெட்டில் 2745 பந்துகள் வீசி 3117 ரன்கள் கொடுத்துள்ளார்.

Mohammad Amir

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் 62 போட்டிகளில் 61 இன்னிங்ஸ் விளையாடி 1321 பந்துகள் வீசி 1558 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 71 விக்கெட்டுகளும் கைப்பற்றியிருக்கிறார். அதோடு 25 மெய்டன் ஓவர்கள் வீசியிருக்கிறார். இந்திய அணியின் ஸ்விங் பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் 87 டி20 போட்டிகளில் விளையாடி 1791 பந்துகள் வீசி 2079 ரன்கள் கொடுத்ததோடு, 90 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். அதோடு, 24 மெயன் ஓவர்களும் வீசியிருக்கிறார்.

Jasprit Bumrah

இந்தப் பட்டியலில் இந்திய அணியின் இளம் ஜாம்பவான் பவுலரான ஜஸ்ப்ரித் பும்ராவும் இடம் பெற்றிருக்கிறார். அவர், 70 டி20 போட்டிகளில் 69 இன்னிங்ஸ் விளையாடி 1509 பந்துகள் வீசி 89 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். இதில், 21 மெய்டன் ஓவர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!