வீரர்களுக்கு கோடி கோடியாக அள்ளி கொடுத்த ஜெய் ஷா தனது பதவிக்கு பிசிசிஐ.யிடம் அவர் சம்பளமே பெற்றதில்லை என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். அவர் செயலாளராக பதவி வகித்த போது அதற்கான ஊதியத்தை பெற்றதே கிடையாது. பொதுவாக பிசிசிஐ.யில் செயலாளர், துணை செயலாளர், பொருளாளர், தலைவர் என அனைத்து பதவிகளுக்கும் ஊதியமே கிடையாதாம். இவை அனைத்தும் கௌரவத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறதாம்.