KL Rahul
கே.எல். ராகுல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை விட்டு வெளியேற உள்ளதாக பரவலாக செய்திகள் வெளியான நிலையில், அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி ராகுல் தங்கள் அணியின் பிரிக்க முடியாத அங்கம் என்று தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், அடுத்த சீசன் ஐபிஎல் தொடரில் சாகிர் கான் லக்னோ அணியின் வழிகாட்டியாக செயல்படுவார் என்றும் அறிவித்துள்ளார்.
Lucknow Super Giants
2025 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக கர்நாடக வீரர் கே எல் ராகுல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை விட்டு வெளியேற உள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையில், செவ்வாய்க்கிழமை கே எல் ராகுல், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி உரிமையாளர் டாக்டர் சஞ்சீவ் கோயங்காவை சந்தித்து பேசினார். இந்நிலையில், இன்று சஞ்சீவ் கோயங்கா பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி முக்கிய அப்டேட்டை வழங்கியுள்ளார்.
KL Rahul
17வது ஐபிஎல் தொடரில் கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, லீக் சுற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக படுதோல்வியடைந்தது. இதையடுத்து, போட்டி முடிந்தவுடன் மைதானத்திலேயே அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் கே எல் ராகுலை கடுமையாக சாடினார்.
KL Rahul and Sanjiv Goenka
இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி, சஞ்சீவ் கோயங்காவின் செயலுக்கு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, கே எல் ராகுல் 2025 ஐபிஎல் தொடரில் லக்னோ அணியை விட்டு வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் அதிர்ச்சியடைந்த கோயங்கா, சில நாட்களிலேயே கே எல் ராகுலை தனது இல்லத்திற்கு அழைத்து இரவு விருந்து வழங்கி சமாதானப்படுத்தினார்.
KL Rahul - Lucknow Super Giants
சஞ்சீவ் கோயங்காவின் இந்த முயற்சிக்குப் பிறகும், கே எல் ராகுல் லக்னோ அணியிலிருந்து ஏற்கனவே ஒரு காலை வெளியே எடுத்துவிட்டதாக பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. மேலும், தைனிக் ஜாக்ரன் ஒரு படி மேலே சென்று, கே எல் ராகுல் வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாட ஆர்வமாக உள்ளதாக செய்தி வெளியிட்டது.
KL Rahul, LSG
இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் இன்று சஞ்சீவ் கோயங்கா பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதுமட்டுமின்றி, முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். "வதந்திகள் குறித்து நான் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை. ஆனால், ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். அவர் எங்கள் அணியின் பிரிக்க முடியாத அங்கம், அவர் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்" என்று சிரித்தபடி பதிலளித்தார்.
Zaheer Khan, KL Rahul, LSG, IPL 2025,
மேலும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, அடுத்த சீசன் ஐபிஎல் தொடரில் சாகிர் கான் தங்கள் அணியின் வழிகாட்டியாக செயல்படுவார் என்றும் அறிவித்துள்ளார். முன்னதாக, கௌதம் கம்பீர் லக்னோ அணியின் வழிகாட்டியாக செயல்பட்டார். கம்பீரின் வழிகாட்டுதலின் கீழ் லக்னோ அணி தொடர்ந்து இரண்டு முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. கடந்த சீசனில் கம்பீர் லக்னோவை விட்டு வெளியேறி கே.கே.ஆர் அணியின் வழிகாட்டியாக பணியாற்றினார்.