MS Dhoni Car Collection: தோனியின் சொகுசு கார் சாம்ராஜ்யம்: டாப் 5 விலையுயர்ந்த கார்கள்!

First Published | Aug 28, 2024, 6:48 PM IST

கிரிக்கெட்டில் சாம்ராஜ்யம் அமைத்த எம்.எஸ். தோனி, சொகுசு கார்கள் மீதும் அதே ஆர்வம் கொண்டவர். ஐசிசி டி20 உலகக் கோப்பை, ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று ஐசிசி டிராபிகளை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார். இந்த வெற்றிகளுக்கு அப்பால், அவரது சொகுசு கார் சேகரிப்பு குறித்து அறிந்து கொள்வோம்.

கிரிக்கெட்டில் தனக்கென்று தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர்களில் எம்.எஸ். தோனியும் ஒருவர். தல, கூல் கேப்டன் என்று அழைக்கப்படும் தோனி கிரிக்கெட் சாதனைகளுக்காக மட்டுமின்றி, அனைவரையும் ஈர்க்கக் கூடிய சொகுசு கார்களின் சேமிப்புக்காகவும் அனைவராலும் கொண்டாடப்படுகிறார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை, ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என்று 3 ஐசிசி டிராபிகளை வென்று கொடுத்த ஒரே ஒரு சாதனை கேப்டன் எம்.எஸ்.தோனி மட்டுமே. இவரது சாதனையை இதுவரையில் விராட் கோலியாகட்டும், ரோகித் சர்மாவாகட்டும் யாரும் முறியடிக்கவில்லை.

Tap to resize

தோனி கார் ஓட்டிச் செல்லும் வீடியோ

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரருமான தோனி விளையாட்டுகளில் தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியிருக்கிறார். இது தவிர உயர்தர ஆட்டோமொபைல்களிலும் தனிக்கென்று சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியிருக்கிறார். இதில், எம்எஸ் தோனிக்கு சொந்தமான டாப் 5 மிக விலையுயர்ந்த கார்களை பற்றி பார்ப்போம் வாங்க..

Porsche 911

தோனியின் சிக்னேச்சர் சேகரிப்பில் முதலிடம் பிடித்திருப்பது Porsche 911 (போர்சே 911) என்ற சொகுசு கார் தான். இந்த காரின் மதிப்பு ரூ.2.5 கோடி. ஜெர்மன் பொறியியலின் அதிசயமான இந்த கார், 5 வினாடிகளுக்குள் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது. இந்த காரின் மஞ்சள் நிறம், தோனியின் சிஎஸ்கேயின் மஞ்சள் நிற ஜெர்சியை பிரதிபலிக்கிறது. இது வெறும் கார் மட்டுமின்றி தோனியின் திறமை மற்றும் அவரது வேகத்திற்கான ரசனையின் அடையாளம்.

Ferrari 599 GTO

ஃபெராரி 599 ஜிடிஓ

எம்.எஸ்.தோனியின் சேகரிப்பில் மற்றொரு மாணிக்கம் ஃபெராரி 599 ஜிடிஓ. இந்த காரின் விலை ரூ.1.40 கோடி. இத்தாலியில் வடிவமைக்கப்பட்ட இந்த கார் V12 டர்போ இயந்திரத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. இது 3.8 வினாடிகளில் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது. வேகம் மற்றும் ஆடம்பரத்திற்கான ஒரு சிறந்த எடுத்துக் காட்டு தான் ஃபெராரி 599 ஜிடிஓ. இது தோனியின் ஆளுமை மற்றும் வேகத்திற்குரிய காராக இந்த ஃபெராரி கார் பொருந்துகிறது.

Jeep Grand Cherokee Trackhawk

ஜீப் கிராண்ட் செரோக்கி டிராஹாக்:

ரூ.1.4 கோடி மதிப்புள்ள ஜீப் கிராண்ட் செரோக்கி டிராஹாக் ஒரு எஸ்யுவி ஆகும். சுமார் 6.2 லிட்டர் சூப்பர் சார்ஜ்டு எஞ்சின் கொண்ட இந்த எஸ்யுவி வெறும் 5 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

Hummer H2:

ஹம்மர் ஹெச்2

ஹம்மர் ஹெச்2வின் விலை ரூ.75 லட்சம். இது தோனியின் மனதில் தனி இடம் பிடித்துள்ளது. இது வி8 பெட்ரோல் எஞ்சினைக் கொண்டுள்ளது. முரட்டுத்தனத்தின் அடையாளமாக ஹம்மர் ஹெச்2 கருதப்படுகிறது. இது தோனிக்கான கம்பீரத்தை காட்டுகிறது.

pontiac firebird trans am

போண்டியாக் ஃபயர்பேர்ட் டிரான்ஸ் ஆம்:

தோனியின் சேகரிப்பில் முக்கியமான அங்கமாக போண்டியாக் ஃபயர்பேர்ட் டிரான்ஸ் ஆம் கார் உள்ளது. இந்த காரின் விலை ரூ.70 லட்சம் ஆகும். இது கடந்த 2020 ஆம் ஆண்டு தோனிக்கு சாக்‌ஷியால் பரிசளிக்கப்பட்டுள்ளது. இந்த விண்டேஜ் கார் 1970 மற்றும் 1980களை நினைவுபடுத்தும் ரெட்ரோ வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது விண்டேஜ் கார் மீது தோனி வைத்துள்ள அழியாத காதலை வெளிப்படுத்துகிறது.

MS Dhoni Car Collections

இது போன்ற ஆடம்பரமான சொகுசு கார்கள் தோனியின் ஸ்டைல், ஆர்வம், கார் மீதான காதல் ஆகியவற்றை பிரதிபலிக்கிறது. தோனியின் கார் கலெக்‌ஷனில் உள்ள ஒவ்வொரு காரும் அதன் கதையை விளக்கி கூறுகிறது. அதுமட்டுமின்றி தோனியின் கார் கலெக்சன் வெற்றிக்கான சிறந்த அடையாளமாக பார்க்கப்படுகிறது.

Latest Videos

click me!