பிளான் ரெடி; கப்பு எங்களுக்கு தான் - மகளிர் டி20 உலகக்கோப்பை இந்திய அணி கேப்டன் பேட்டி

First Published | Aug 28, 2024, 4:45 PM IST

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வெல்லும் என்று அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Harmanpreet Kaur

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகின்ற அக்டோபர் 3ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. முன்னதாக போட்டிகள் வங்கதேசத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அங்கு அமைதியின்மை காரணமாக போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

Harmanpreet Kaur

சுமார் 11 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய ஆடவர் அணி டி20 உலகக்கோப்பையை கைப்பற்றி உள்ளதால் மகளிர் அணி மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அதன்படி பயிற்சி ஆட்டத்தில் முதலில் மேற்கிந்திய தீவுகளுடனும், பின்னர் தென்னாப்பிரிகாவுடனும் இந்தியா விளையாட உள்ளது.

Latest Videos


Team India Squad

இதனிடையே மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ்(WC), யஸ்திகா பாட்டியா (WC) பூஜா வஜ்த்ரகர், அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்குர், தயாளன் ஹேமலதா, ஆஷா ஷோபனா, ராதா யாதவ், ஷ்ரேயங்கா பாட்டீல், சஜனா சஜீவன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Team India Squad

உலகக்கோப்பை தொடர்பாக இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், ஐசிசியின் முக்கியமான தொடர்கள் அனைத்திலும் இந்திய அணி எப்பொழுதும் சிறப்பாக செயல்படும். இந்த முறையும் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. 

Harmanpreet Kaur

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய அணி அதிகமான ஆட்டங்களில் விளையாடியது கிடையாது. ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தின் சூழல் இந்திய ஆடுகளத்தைப் போன்றே இருக்கும் என்று நம்புகிறேன். ஐக்கிய அரபு அமீரக ஆடுகளங்களின் தன்மைக்கேற்ப விரைவில் எங்களை மாற்றிக் கொண்டு கோப்பையை வெல்ல முயல்வோம் என்று தெரிவித்துள்ளார்.

click me!