2019 உலகக் கோப்பை தோல்விக்கு தோனியின் பேட்டிங் வரிசை மாற்றம் தான் காரணமா? ரோகித் சர்மா என்ன சொன்னார்?

First Published | Aug 28, 2024, 1:50 PM IST

2019 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா நியூசிலாந்திடம் தோல்வியடைந்ததில் தோனியின் பேட்டிங் வரிசை குறித்து ரோகித் சர்மா தனது கருத்தை தெரிவித்துள்ளார். தோனி 4ஆவது வீரராக களமிறங்கியிருக்க வேண்டும் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.

India vs New Zealand 2019 World Cup

2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை இங்கிலாந்து நடத்தியது. இந்த தொடரில் இந்தியா விளையாடிய 9 போட்டிகளில் 7ல் வெற்றி பெற்றது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது. மேலும், ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. சிறப்பாக விளையாடிய விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தோனிக்கு பிறகு ஒருநாள் உலகக் கோப்பை டிராபியை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

India vs New Zealand 2019 World Cup 1st Semi Final

ஆனால், ஷிகர் தவானின் காயம், அணியில் தடுமாற்றம் ஆகியவற்றின் காரணமாக முதல் அரையிறுதிப் போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது. முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் விளையாடிய நியூசிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 239 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் 67 ரன்களும், ராஸ் டெய்லர் 74 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொதப்பினர். இதனால், நியூசிலாந்து 239 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Tap to resize

India vs New Zealand 2019 World Cup

எளிதில் எட்டக் கூடிய இலக்கை நோக்கி இந்தியா விளையாடியது. இதில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான கேஎல் ராகுல், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தலா ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். அப்போது இந்தியா 5 ரன்கள் மட்டும் எடுத்திருந்தது. அதன் பிறகு வந்த ரிஷப் பண்ட் தன் பங்கிற்கு 32 ரன்கள் எடுக்க, தினெஷ் கார்த்திக் 6 ரன்னில் நடையை கட்டினார்.

India vs New Zealand 2019 World Cup

இதையடுத்து ஹர்திக் பாண்டியா மற்றும் எம்.எஸ்.தோனி இருவரும் இணைந்து ரன்கள் சேர்த்தனர். பாண்டியா 32 ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசியாக தோனியுடன் ரவீந்திர ஜடேஜா இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி 7ஆவது விக்கெட்டுக்கு 116 ரன்கள் குவித்தது. ரவீந்திர ஜடேஜா 59 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 77 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

India vs New Zealand 2019 World Cup

இந்திய அணியின் கடைசி நம்பிக்கையாக சிறந்த பினிஷரான தோனி களத்தில் இருந்தார். ஆனால், அவரும் ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. அவர் 50 ரன்களில் ரன் அவுட் முறையில் நடையை கட்டினார். இதன் காரணமாக இந்தியா 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

India vs New Zealand

இந்த தோல்விக்கு பிறகு ஒரு சாதாரண வீரராக திகழ்ந்த ரோகித் சர்மா என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? என்னுடைய தனிப்பட்ட முறையில் தோனி 4ஆவது வீரராக களமிறங்க வேண்டும். ஏனென்றால், ஒரு அனுபவமிக்க வீரர், நடுவரிசையில் களமிறங்கும் போது அது அணிக்கு பலமாக இருக்கும்.

India vs New Zealand 2019 World Cup

ஆனால், அப்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் விராட் கோலி இருவரும் தோனியின் பேட்டிங் வரிசையை 7ஆவது இடத்திற்கு மாற்றினர். அதற்கு பதிலாக தோனி 4ஆவது வரிசையில் களமிறங்கினால் நான் மகிழ்ச்சி அடைவேன் என்று கூறியிருக்கிறார்.

India vs New Zealand 2019 World Cup

இந்த உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா 648 ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். இதில், 5 சதம், ஒரு அரைசதம் அடங்கும். அதிகபட்சமாக 140 ரன்கள் குவித்தார். விராட் கோலி 443 ரன்களுடன் 11ஆவது இடத்தில் இருந்தார். இதில், 5 அரைசதங்கள் மட்டுமே அடித்திருந்தார்.

Latest Videos

click me!