Asia Cup:இந்திய அணியில் ஆவேஷ் கானுக்கு பதிலா கண்டிப்பா அவரைத்தான் எடுத்திருக்கணும்! லக்‌ஷ்மிபதி பாலாஜி விளாசல்

First Published Aug 25, 2022, 7:21 PM IST

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஆவேஷ் கானுக்கு பதிலாக தீபக் சாஹரைத்தான் எடுத்திருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் லக்‌ஷ்மிபதி பாலாஜி கருத்து கூறியுள்ளார்.
 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. அதற்காக அனைத்து அணிகளும் அமீரகம் சென்று தீவிரமாக பயிற்சி எடுத்துவருகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி வரும் 28ம் தேதி துபாயில் நடக்கிறது. அதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
 

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான்.

இதையும் படிங்க - ஆசிய கோப்பையை எந்த அணி வெல்லும்..? ஷேன் வாட்சன் ஆருடம்
 

இந்திய அணியில் சீனியர் ஃபாஸ்ட் பவுலர் ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்ஷல் படேல் ஆகிய இருவரும் காயத்தால் ஆடாதபோதிலும், நல்ல ஸ்விங் பவுலரான தீபக் சாஹர் மெயின் அணியில் எடுக்கப்படவில்லை. ஸ்டாண்ட்பை வீரராகத்தான் எடுக்கப்பட்டுள்ளார்.

ஆவேஷ் கானுக்கு பதிலாக தீபக் சாஹரை எடுத்திருக்க வேண்டும் என்று லக்‌ஷ்மிபதி பாலாஜி கருத்து கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய லக்‌ஷ்மிபதி பாலாஜி, தீபக் சாஹர் அவரது ஆட்டத்திறனை கடும் உழைப்பு மற்றும் பயிற்சியின் மூலம் மேம்படுத்தியுள்ளார்.  காயம் காரணமாக தீபக் சாஹர் 6 மாதமாக கிரிக்கெட் ஆடமுடியாமல் போயிற்று. இந்திய அணியில் ஃபாஸ்ட் பவுலராக இடம்பிடிக்க பவுலர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

இதையும் படிங்க - டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்..!
 

முதல் பந்திலிருந்தே கட்டுப்பாட்டுடன் வீசுவார். புதிய பந்தில் 2 பக்கமும் நன்றாக ஸ்விங் செய்வார் தீபக் சாஹர். இப்போது அவர் ஃபிட்டாக தெரிகிறார். எனவே அனைத்து போட்டிகளிலும் அவர் ஆடவேண்டும். வங்கதேசத்துக்கு எதிராக அவர் வீழ்த்திய ஹாட்ரிக்கை யார் மறப்பார்கள்.? அமீரகத்தில் புதிய பந்தில் தீபக் சாஹர் அருமையாக வீசி தாக்கத்தை ஏற்படுத்துவார். பும்ராவும் ஷமியும் இல்லாத நிலையில், தீபக் சாஹரைத்தான் முதல் சாய்ஸ் பவுலராக எடுத்திருக்க வேண்டும் என்று லக்‌ஷ்மிபதி பாலாஜி கருத்து கூறியுள்ளார்.
 

click me!