ஆசிய கோப்பையை எந்த அணி வெல்லும்..? ஷேன் வாட்சன் ஆருடம்

First Published Aug 25, 2022, 4:42 PM IST

ஆசிய கோப்பை தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் ஷேன் வாட்சன் ஆருடம் தெரிவித்துள்ளார். 
 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 27ம் தேதி முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் கலந்துகொண்டு ஆடுகின்றன.
 

ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் ஆகிய 3 அணிகளும், பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகளும் ஆடுகின்றன. 

இதையும் படிங்க - IPL-ல் ஆடியதால் என் அப்பா இறப்பதற்கு முன் அவரை பார்க்க முடியல!அதோட கிரிக்கெட்டையே வெறுத்துட்டேன்-பென் ஸ்டோக்ஸ்
 

இந்த  தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி வரும் 28ம் தேதி துபாயில் நடக்கிறது. கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் களமிறங்குகிறது. 
 

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆசிய கோப்பையில் 3 முறை மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேதான் கடும் போட்டி நிலவும். இந்த 2 அணிகளில் ஒன்றுதான் கண்டிப்பாக கோப்பையை வெல்லும். 
 

ஷாஹீன் அஃப்ரிடி ஆடாதது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவு.  ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மிகுந்த பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. எப்பேர்ப்பட்ட வீரர் ஆடவில்லை என்றாலும், அது இந்திய அணியை பாதிக்காத அளவிற்கு இந்திய அணியின் பென்ச் வலிமை உள்ளது. எனவே இந்திய அணிக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகமுள்ளது. 

இதையும் படிங்க - விராட் கோலியின் மோசமான ஃபார்ம்.. விமர்சிப்பவர்களின் வாயை அடைத்த ரவி சாஸ்திரி

எனினும் முன்னாள் வீரர்கள் தங்களது ஆருடங்களை தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில், ஆசிய கோப்பை குறித்து பேசிய ஷேன் வாட்சன், இந்தியா தான் ஆசிய கோப்பையை வெல்லும் என்பது என் கணிப்பு. எந்தவிதமான கண்டிஷனிலும் அபாரமாக ஆடக்கூடிய அணி இந்தியா. பாகிஸ்தானும் இந்திய அணியை  வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. எனவே இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி மிகவும் ஸ்பெஷலானது என்று வாட்சன் கூறினார்.

click me!