2023 ஒருநாள் உலக கோப்பை இந்தியாவில் நடக்கிறது. கடைசியாக 2011ம் ஆண்டு தான் ஒருநாள் உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடந்தது. அந்த உலக கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வென்று அசத்தியது. அந்த உலக கோப்பையில் மும்பை வான்கடேவில் நடந்த ஃபைனலில் இந்தியாவிடம் தோற்ற இலங்கை அணியை வழிநடத்திய குமார் சங்கக்கரா, இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் உலக கோப்பை குறித்து பேசியிருக்கிறார்.
முன்பெல்லாம் துணைக்கண்ட நாடுகளில் ஆடுவது, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய துணைக்கண்ட அணிகளுக்கு சாதகமாக அமையும். ஆனால் ஐபிஎல் வந்த பிறகு சூழல் மாறிவிட்டது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவில் ஐபிஎல்லில் ஆடுவதால், துணைக்கண்ட ஆடுகளங்களில் ஸ்பின் பவுலிங்கை எதிர்கொண்டு ஆடும் வித்தையை கற்றுக்கொண்டனர். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் அணிகளின் அணுகுமுறையும் மாறிவிட்டது. 300 ரன்களை அசால்ட்டாக அடிக்கின்றன.
சஞ்சு சாம்சனுக்கு பதில் களமிறங்குவது யார்..? நீண்ட நாள் காத்திருக்கும் வீரருக்கு சான்ஸ்..! உத்தேச ஆடும் லெவன்
இதுகுறித்து பேசியுள்ள குமார் சங்கக்கரா, 2011க்கு பிறகு கிரிக்கெட் மாறிவிட்டது. ஆசிய கண்டிஷன் துணைக்கண்ட வீரர்களுக்குத்தான் சாதகமாக இருக்கும் என்ற காலமெல்லாம் கடந்துவிட்டது. துணைக்கண்டத்தில் ஸ்பின் பவுலிங்கை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வீரர்கள் கற்றுக்கொண்டுவிட்டனர். ஐபிஎல்லில் ஆடுவது அவர்களுக்கு பெரியளவில் உதவியிருக்கிறது என்றார் சங்கக்கரா.