Kuldeep Yadav 100 Wickets in IPL Cricket : அதிவேகமாக 100 விக்கெட்டுகள் கைப்பற்றிய சுழற்பந்து வீச்சாளராக டெல்லி கேபிடல்ஸ் அணியின் குல்தீப் யாதவ் சாதனை படைத்துள்ளார்.
Kuldeep Yadav 100 Wickets in IPL Cricket : மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான முக்கியமான போட்டி நேற்று வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில், டெல்லி அணியில் அக்ஷர் படேல் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக ஃபாப் டூ ப்ளெசிஸ் கேப்டனாக செயல்பட்டார். அதன்படி டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பவுலிங் செய்தது.
26
டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ்
இதையடுத்து முதலில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தது. இதில் டெல்லி பவுலர்களை எதிர்கொள்ள முடியாமல் மும்பை பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். அதன்படி விக்கெட்டுகளையும் பறிகொடுத்தனர். ரோகித் சர்மா 5, வில் ஜாக்ஸ் 21, ரியான் ரிக்கல்டன் 25, திலக் வர்மா 27, ஹர்திக் பாண்டியா 3 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
36
மும்பை இந்தியன்ஸ் 180 ரன்கள் குவிப்பு
18 ஓவர்கள் வரையில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. கடைசி 2 ஓவர்களில் மும்பை அணி 27 மற்றும் 21 ரன்கள் என்று மொத்தமாக 48 ரன்கள் எடுக்கவே 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் குவித்தது. இதில் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 43 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்ஸர் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதே போன்று நமன் திர் 8 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 24 ரன்கள் சேர்த்துக் கொடுத்தார். டெல்லி கேபிடல்ஸ் அணியில் பவுலிங்கைப் பொறுத்த வரையில் முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளும், சமீரா, குல்தீப் யாதவ், முஷ்டாபிஜூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
56
குல்தீப் யாதவ் 100 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை
இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் ரியான் ரிக்கல்டன் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் குறைவான போட்டிகள் விளையாடிய 100 விக்கெட்டுகள் கைப்பற்றிய சுழற்பந்து வீச்சாளர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். குல்தீப் 97 போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார்.
66
குறைவான போட்டிகளில் 100 விக்கெட்டுகள் கைப்பற்றிய சுழற்பந்து வீச்சாளர்கள்:
83 போட்டிகள் – அமித் மிஸ்ரா, ரஷீத் கான், வருண் சக்கரவர்த்தி