கே.எல். ராகுல் 7வது முறையாக 500க்கும் அதிகமாக ரன்கள் எடுத்து சாதனை!

Rsiva kumar   | ANI
Published : May 22, 2025, 12:50 AM ISTUpdated : May 22, 2025, 03:05 AM IST

KL Rahul Crossed 500 Plus Runs in IPL Cricket : டெல்லி கேபிடல்ஸ் அணியின் முக்கியமான வீரரான கே.எல். ராகுல், ஐபிஎல் தொடரில் 7வது முறையாக 500 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

PREV
15
கேஎல் ராகுல் 500க்கும் அதிகமாக ரன்கள் எடுத்து சாதனை

KL Rahul Crossed 500 Plus Runs in IPL Cricket :டெல்லி கேபிடல்ஸ் மற்றும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல். ராகுல், இந்தியன் பிரீமியர் லீக்கில் 7வது முறையாக 500க்கும் அதிகமாக ரன்கள் எடுத்து 18ஆவது ஐபிஎல் சீசனை நிறைவு செய்து சாதனையை படைத்துள்ளார். இது ஐபிஎல் வரலாற்றில் 2ஆவது அதிகபட்சமாகும்.

25
கோலிக்கு பிறகு 500+ ரன்கள் எடுத்த 2ஆவது இந்திய வீரர்

வான்கடே மைதானத்தில் இன்று நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராகுல் இந்த சாதனையை எட்டினார். 181 ரன்கள் இலக்கைத் துரத்திய டெல்லி அணி தோல்வியடைந்தாலும், 33 வயதான ராகுல் 500 ரன்களைக் கடந்தார்.

35
கே எல் ராகுல் 500 ரன்களைக் கடந்தது இது 7வது முறையாகும்.

ஐபிஎல் தொடரில் ராகுல் 500 ரன்களைக் கடந்தது இது 7வது முறையாகும். இதன்மூலம் ஆஸ்திரேலிய முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னருடன் இணைந்துள்ளார். இந்திய அணியின் விராட் கோலி 8 முறை 500க்கும் அதிகமாக ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 5 முறை 500+ ரன்கள் எடுத்து அடுத்த இடத்தில் உள்ளார்.

45
டெல்லி அணியின் பிளேஆஃப் வாய்ப்பு கேள்விக்குறி

டெல்லி அணியின் பிளேஆஃப் வாய்ப்பு கேள்விக்குறியாக இருந்த இந்தப் போட்டியில், ராகுல் 6 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார். நியூசிலாந்தின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் ரியான் ரிகெல்டன் கேட்ச் பிடித்தார்.

போல்ட் புன்னகைத்தார், ராகுல் ஏமாற்றத்துடன் தலையை ஆட்டினார். ஐபிஎல் 18வது சீசனில் பவர்பிளேயில் போல்ட் 8வது முறையாக விக்கெட் வீழ்த்தினார். அவரது எகானமி ரேட் 8.37 ஆகும். முகமது சிராஜ் மற்றும் கலீல் அகமது தலா 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

55
12 போட்டிகளில் 504 ரன்கள் குவித்த ராகுல்

12 போட்டிகளில் 504 ரன்கள் குவித்துள்ள ராகுல், 56.00 சராசரியுடன் 148.67 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடி வருகிறார். ராகுலைப் போலவே, டெல்லி அணியின் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் மும்பை அணியின் இலக்கை எதிர்கொள்ளத் தவறினர்.

மிட்செல் சான்ட்னர் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லி அணியின் வெற்றி வாய்ப்பைத் தகர்த்தனர். டெல்லி அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories