MI vs DC: ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி 4ஆவது அணியாக ஐபிஎல் 2025 பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
IPL 2025 MI vs DC: ஐபிஎல் 2025 தொடரின் 63வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மும்பை அணி அபாரமாக விளையாடி டெல்லியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி ஐபிஎல் 2025 ப்ளே ஆஃப் சுற்றில் நான்காவது அணியாக இடம்பிடித்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
26
மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ்
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் தற்காலிக கேப்டன் டு பிளெசிஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். காயம் காரணமாக டெல்லி அணியின் வழக்கமான கேப்டன் அக்சர் படேல் இந்தப் போட்டியில் விளையாடவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்தது. கடைசி இரண்டு ஓவர்களில் 48 ரன்கள் குவித்ததன் மூலம் மும்பை அணி டெல்லிக்கு 181 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது.
36
சூர்யகுமார் யாதவ் சிறப்பான பேட்டிங்
மும்பை அணி சார்பில் சூர்யகுமார் யாதவ், நமன் தீர் ஆகியோர் கடைசி இரண்டு ஓவர்களில் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். சூர்யகுமார் 43 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நமன் தீர் 8 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சூர்யகுமார் 7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடித்தார். நமன் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடித்தார்.
சூர்யகுமார் யாதவ் அதிரடியால் மும்பை இந்தியன்ஸ் 180 ரன்கள் குவிப்பு
இருவரும் இணைந்து 21 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்தனர். திலக் வர்மா 27 ரன்கள் எடுத்தார். மும்பை அணி சார்பில் ரியான் ரிகெல்டன் 25, வில் ஜாக்ஸ் 21 ரன்கள் எடுத்தனர். ரோஹித் சர்மா 5 ரன்களிலும், ஹார்திக் பாண்டியா 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். டெல்லி அணி சார்பில் முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். துஷ்மந்தா சமீரா, முஸ்தாபிசுர் ரஹ்மான், குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
56
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 181 ரன்கள் வெற்றி இலக்கு
181 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய DC அணி 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. டெல்லி அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு முடிவுக்கு வந்தது. டெல்லி அணி சார்பில் சமீர் ரிஸ்வி 39 ரன்கள் எடுத்து அதிகபட்சமாக ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மும்பை அணி சார்பில் மிட்செல் சான்ட்னர் 3 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி டெல்லி அணியை நிலைகுலையச் செய்தனர்.
66
டெல்லி கேபிடல்ஸ் 121 ரன்களுக்கு ஆல் அவுட்
டெல்லி கேபிடல்ஸ் அணி 18.2 ஓவர்களில் 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டெல்லி அணி சார்பில் சமீர் ரிஸ்வி 39, விப்ராஜ் நிஹாம் 20, அஷுதோஷ் சர்மா 18, கே.எல். ராகுல் 11 ரன்கள் எடுத்தனர். இந்த நான்கு பேரைத் தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் இரட்டை இலக்க ரன்களை எட்டவில்லை.