IND vs PAK: குல்தீப், அக்சர் சுழலில் சிக்கிய பாகிஸ்தான்! கடைசியில் காப்பாற்றிய அப்ரிடி! இந்தியாவுக்கு எளிய இலக்கு!

Published : Sep 14, 2025, 10:07 PM IST

Asia Cup 2025: IND vs PAK: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் அசத்தலான பவுங்கில் பாகிஸ்தான் அணி 127 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. குல்தீப் யாதவ் அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

PREV
15
ஆசிய கோப்பை: இந்தியா-பாகிஸ்தான் போட்டி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா, பாகிஸ்தான் போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்கான் ஆகா தங்கள் அணி முதலில் பேட்டிங் செய்யும் என அறிவித்தார். அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய பாகிஸ்தானுக்கு தொடக்கமே பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஹர்திக் பாண்ட்யா வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே பாகிஸ்தானின் அதிரடி வீரர் சைம் அயூப் பும்ராவிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார்.

25
பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம்

இதனைத் தொடர்ந்து பும்ரா வீசிய 2வது ஓவரிலேயே முகமது ஹாரிஸ் 3 ரன்னில் பாண்ட்யாவிடம் கேட்ட் கொடுத்தார். இதன்பிறகு களமிறங்கிய ஃபக்கர் ஜமான் 3 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் அடித்த திருப்தியுடன் அக்சர் படேல் பந்தில் கேட்ச் ஆனார். அப்போது பாகிஸ்தான் ஸ்கோர் 45/3 என்ற நிலையில் இருந்தது. இதன் பிறகு பாகிஸ்தான் விக்கெட்டுகள் கொத்து கொத்தாக விழுந்தன. கேப்டன் சல்மான் ஆகா, அக்சர் படேல் பந்தில் 3 ரன்னில் கேட்ச் ஆனார்.

35
குல்தீப் ஒரே ஓவரில் 2 விக்கெட்

பின்பு குல்தீப் யாதவ் ஒரே ஓவரில் 2 விக்கெட் வீழ்த்தி பாகிஸ்தானுக்கு செக் வைத்தார். அதாவது 13வது ஓவரை வீசிய குல்தீப் யாதவ் 4வது பந்தில் ஹசன் நவாஸ் (5), 5வது பந்தில் முகமது நவாஸ் (0) ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றினார். இதனால் பாகிஸ்தான் அணி 64/6 என தத்தளித்தது. ஒரு பக்கம் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் களத்துக்கு வருவதும் உடனே அவுட்டாகி வெளியே போவதுமாக இருந்த நிலையில், தொடக்க வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் சிறப்பாக விளையாடினார். அவருக்கு ஃபஹீம் அஷ்ரஃப் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்.

45
சிக்சர் விளாசிய ஆச்சரியப்பட வைத்த ஷகின் ஷா அப்ரிடி

நன்றாக விளையாடிய இந்த ஜோடியை குல்தீப் யாதவ் பிரித்தார். சூப்பராக விளையாடிய சாஹிப்சாதா ஃபர்ஹான் (44 பந்தில் 1 பவுண்டரி, 3 சிக்சருடன் 40 ரன்) குல்தீப் பந்தில் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஃபஹீம் அஷ்ரஃப் (11 ரன்( வருண் சக்கரவர்த்தில் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இதற்கிடையே பவுலரான ஷகின் ஷா அப்ரிடி 2 சிக்சர்களை விளாசியதால் பாகிஸ்தான் அணி 100 ரன்களை கடந்தது. சுஃபியான் முகீமும் சில பவுண்டரிகள் அடித்தார். இதன்பிறகு அவர் பும்ராவின் சூப்பர் யார்க்கரில் 10 ரன்னில் போல்டானார்.

55
அக்சர் படேல், குல்தீப் அசத்தல் பவுலிங்

மறுபக்கம் அதிரடியாக ஆடிய ஷகின் ஷா அப்ரிடி பாண்ட்யாவின் கடைசி ஓவரில் 2 இமாலய சிக்சர்கள் விளாசி பிரம்மிக்க வைத்தார். 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்துள்ளது. சிக்சர் மழை பொழிந்த ஷகின் ஷா அப்ரிடி 16 பந்தில் 4 சிக்சர்களுடன் 33 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார். அக்சர் படேல் 4 ஓவரில் 18 ரன் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். பும்ரா 2 விக்கெட் எடுத்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories