Asia Cup 2025: ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து பார்க்கலாம். இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்திய அணியை பொறுத்தவரை தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் பந்தாடியது. பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை தனது முதல் ஆட்டத்தில் ஓமனை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
25
இந்தியா-பாகிஸ்தான் மோதல்
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் வலுவாக உள்ளது. அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். பாகிஸ்தானை பொறுத்தவரை சுழற்பந்து வீச்சில் வலுவாக உள்ளது. இரு அணிகளும் இதுவரை 13 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இந்தியா 10ல் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் 3ல் வெற்றி பெற்றுள்ளது.
35
போட்டியை எந்த டிவியில் பார்க்கலாம்?
கடைசியாக இரு அணிகளும் விளையாடிய 5 போட்டிகளில் இந்தியா மூன்றிலும், பாகிஸ்தான் இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்தியா vs பாகிஸ்தான் ஆசிய கோப்பை 2025 டி20 குரூப் ஏ போட்டி சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்படும் மற்றும் இந்தியாவில் சோனிலிவ் செயலி மற்றும் இணையதளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படும்.
சோனி லிவ் மற்றும் ஃபேன் கோட் செயலிகளில் நேரடி ஒளிபரப்பும் கிடைக்கும். தூர்தர்ஷன் மற்றும் ஜியோ டிவியிலும் இலவசமாகப் போட்டியைக் காணலாம். சோனி ஸ்போர்ட்ஸ் டென் 1, சோனி ஸ்போர்ட்ஸ் டென் 1 எச்டி, சோனி ஸ்போர்ட்ஸ் டென் 5, சோனி ஸ்போர்ட்ஸ் டென் 5 எச்டி டிவி ஆகிய சேனல்களில் நேரலை ஒளிபரப்பு செய்யப்படும்.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு போட்டி தொடங்கும். 7.30 மணிக்கு டாஸ் போடப்படும். துபாய் பிட்ச்சை பொறுத்தவரை நல்ல பவுன்ஸ் மற்றும் ஸ்விங் உள்ளதால் பாஸ்ட் பவுலர்கள் மற்றும் ஸ்பின் பவுலர்களுக்கு கைகொடுக்கும். இங்குள்ள டி20 போட்டிகளில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 160-170 ஆகும். முதலில் பேட்டிங் செய்த அணியே அதிக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
55
இந்திய அணியின் பிளேயிங் லெவன்
இந்திய அணி ஐக்கிய அரபு அமீரக அணியை சாய்த்த நிலையில், அதில் விளையாடிய வீரர்களே பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ: அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.