Asia Cup: India vs Pakistan: ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக விளையாடும் பாகிஸ்தான் அணியை புறக்கணித்து பஞ்சாப் கிங்ஸ் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவும், எதிர்ப்பும் உள்ளது.
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஹாங்காங் ஆகிய 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதுவரை 3 ஆட்டங்கள் முடிந்து விட்டன. இந்த தொடரில் தனது தொடக்க ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்ட இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
25
ஆசிய கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் மோதல்
இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் வரும் 14ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பாகிஸ்தானை சந்திக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பிறகு இரு அணிகளும் நேரடியாக மோத உள்ளதால் இந்த போட்டிக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இந்த போட்டி தொடர்பாக ஐபிஎல் அணியான பஞ்சாப் கிங்ஸ் வெளியிட்ட போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
35
பஞ்சாப் கிங்ஸ் வெளியிட்ட சர்ச்சை போஸ்டர்
அதாவது இந்தியா, பாகிஸ்தான் போட்டி தொடர்பாக பஞ்சாப் கிங்ஸ் அணி எக்ஸ் தளத்தில் ஒரு போஸ்டர் வெளியிட்டுள்ளது. அந்த போஸ்ட்ரில் இந்திய அணியின் லோகோவும், சூர்யகுமார், யாதவ் சுப்மன் கில் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. போட்டி நடக்கும் நாள், நேரம், இடம் ஆகியவை குறிப்பிடட்டுள்ளது. அதே வேளையில் பாகிஸ்தான் அணியின் லோகோ இடம் பெறவில்லை. பாகிஸ்தான் லோகோ இடம்பெற வேண்டிய இடம் பிளாங்காக விடப்பட்டுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்தது. மேலும் பயங்கரவாதிகளை களையெடுத்த இந்தியா மீதும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக பாகிஸ்தான் உடனான அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டித்துள்ள நிலையில், பாகிஸ்தான் அணியை புறக்கணிக்கும் வகையில், அவமானப்படுத்தும் வகையில் பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளது.
55
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஆதரவும், எதிர்ப்பும்
பஞ்சாப் கிங்ஸ் அணியின் இந்த செயலுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளப்பியுள்ளன. ''பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுவதே பெரும் தவறு. பஞ்சாப் கிங்ஸ் அணி செய்தது தான் சரி. பாகிஸ்தான் பெயரை கூட நாம் உச்சரிக்க கூடாது'' என்று ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதே வேளையில் வேறு சிலர், ''விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும். பஞ்சாப் கிங்ஸ் என்பது தனி நபர் அல்ல. அது பொதுவான அணி. அந்த அணியில் மற்ற நாடுகளை சேர்ந்தவர்களும் விளையாடுகிறார்கள். ஆகவே இப்படி செய்திருக்க கூடாது. இந்த மேட்ச் தொடர்பான போஸ்டரே போட வேண்டிய அவசியம் இல்லையே'' என்று கூறியுள்ளனர்.