Asia Cup 2025: IND vs PAK: எதிர்ப்புக்கு மத்தியிலும் பாகிஸ்தானுடன் விளையாடுவது ஏன்? பிசிசிஐ விளக்கம்!

Published : Sep 14, 2025, 03:48 PM IST

Asia Cup: India vs Pakistan: ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாட கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவது என்? என்பதற்கு பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. 

PREV
14
ஆசிய கோப்பை கிரிக்கெட்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு இந்த இரு அணிகளும் மோதுவதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே வேளையில் எப்போதும் இல்லாத வகையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாட கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் இந்தியாவின் எல்லையோரங்களில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதால் அந்த நாட்டுக்கு எதிராக பெரும்பாலான இந்தியர்கள் கொதிப்பில் உள்ளனர்.

24
பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது

பாகிஸ்தானுடன் எந்தவித தொடர்பும் இல்லாத நிலையில், அந்த நாட்டுடன் கிரிக்கெட் மட்டும் விளையாடுவது ஏன்? என பலரும் தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுவது எல்லையில் உயிரிழந்த நமது வீரர்களை அவமானப்படுத்துவது போன்றதாகும் என்றும் இரத்தமும், கிரிக்கெட்டும் எப்படி ஒன்று சேர முடியும்? என்றும் பலர் தெரிவித்து வருகின்றனர்.

பிசிசிஐ விளக்கம்

இந்நிலையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் தேவஜித் சைகியா விளக்கம் அளித்துள்ளார். ''ஆசிய கோப்பை ஒரு பன்னாட்டு போட்டி என்பதால் நாங்கள் அதில் பங்கேற்க முடிவு செய்துள்ளோம். இது ஒரு ஒலிம்பிக்,FIFA போட்டி, AFC போட்டி அல்லது சர்வதேச தடகள போட்டி போன்றது" என்று சைகியா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

34
பாகிஸ்தானுடன் விளையாடுவது ஏன்?

தொடர்ந்து பேசிய அவர், ''எனவே நாங்கள் பன்னாட்டு போட்டியைப் புறக்கணிக்க முடியாது. ஏனென்றால் இந்தப் போட்டியைப் புறக்கணித்தால், நாட்டில் எந்தவொரு பன்னாட்டு போட்டியையும் நடத்துவதற்கான எங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு அது நிறைய எதிர்மறையைக் கொண்டுவரும். 

இது இருதரப்பு போட்டியாக இருந்திருந்தால், எந்த விரோத நாட்டிற்கும் எதிராகவும் நாங்கள் விளையாட மாட்டோம் என்று எப்போதும் சொல்லியிருக்கலாம். பாகிஸ்தானைப் பொறுத்தவரை, 2012-13 முதல் நாங்கள் எந்த இருதரப்பு போட்டிகளிலும் விளையாடவில்லை. இப்போதும் மத்திய அரசு அனுமதி அளித்தன்பேரிலேயே பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறோம்'' என்றார்.

44
இந்தியாவுக்கு பாதகமாக முடியும்

''மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடந்த டி20 போட்டிகள் போன்ற சர்வதேச போட்டியாகவோ அல்லது ஐசிசி போட்டி அல்லது சாம்பியன்ஸ் டிராபியாகவோ இருக்கும் போது, ​​நாங்கள் அதை விளையாடுகிறோம். ஏனெனில் அந்த போட்டிகளில் எங்களுக்கு நேரடி அழைப்பு இல்லை. நாங்கள் விளையாட வேண்டும். 

இந்தியா ஒரு AFC கால்பந்து போட்டியிலோ அல்லது FIFA தகுதிப் போட்டியிலோ அல்லது டேவிஸ் கோப்பையிலோ அல்லது தாமஸ் கோப்பையிலோ பங்கேற்கவில்லை என்று வைத்துக்கொள்வோம், பின்னர் எதிர்காலத்தில், இந்தியாவில் ஒரு காமன்வெல்த் போட்டியையோ அல்லது 2030 களில் ஒலிம்பிக்கையோ நடத்த விரும்பினால் இந்த விஷயங்கள் நமக்கு பாதகமாக அமையும்'' என்றும் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories