இதுதான் ஒருநாள் உலக கோப்பைக்கான எனது இந்திய அணி.. அவங்க 2 பேருக்கும் கண்டிப்பா இடம் இல்ல..! ஸ்ரீகாந்த் அதிரடி

First Published Jan 7, 2023, 3:57 PM IST

ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணிக்கு 20 வீரர்களை பிசிசிஐ ஷார்ட்லிஸ்ட் செய்துள்ள நிலையில், தனது பார்வையில் அந்த லிஸ்ட்டில் இடம்பெற வாய்ப்பில்லாத 2 வீரர்கள் யார் யார் என்று கூறியுள்ள ஸ்ரீகாந்த், 20 பேர் கொண்ட அணியில் 4 ஃபாஸ்ட் பவுலர்கள் மட்டும் இருந்தாலே போதும் என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
 

2011ம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பையை வென்ற இந்திய அணி, அதன்பின்னர் உலக கோப்பை வெல்லவில்லை. 2013ல் வென்ற சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ஒரு ஐசிசி கோப்பையைக்கூட வெல்லவில்லை. 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் அடுத்தடுத்த 2 டி20 உலக கோப்பைகளில் தற்ற இந்திய அணி, இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கவுள்ள ஒருநாள் உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.
 

அதற்காக கோர் அணி கட்டமைப்பை சுற்றி சிறந்த வீரர்களை அணியில் எடுத்து வலுவான அணியுடன் உலக கோப்பைக்கு செல்வதை உறுதிப்படுத்துவதில் இந்திய அணியும் பிசிசிஐயும் உறுதியாக உள்ளது. ஒருநாள் உலக கோப்பைக்காக 20 வீரர்கள் ஷார்ட்லிஸ்ட் செய்துள்ளது பிசிசிஐ. அந்த 20 வீரர்கள் தான் உலக கோப்பை வரை நடக்கவுள்ள அனைத்து ஒருநாள் போட்டிகளிலும் சுழற்சி முறையில் இறக்கப்படுவார்கள். 

பயிற்சியில் நோ பால் வீசி பழக்கப்பட்டதுதான் காரணம்..! அர்ஷ்தீப் சிங், பவுலிங் கோச்சை விளாசிய கம்பீர்

இந்நிலையில், ஒருநாள் உலக கோப்பைக்கான அணி குறித்து பேசியுள்ள முன்னாள் வீரரும் முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், பிசிசிஐ 20 வீரர்களை தேர்வு செய்துள்ளது. அந்த 20 வீரர்கள் லிஸ்ட்டில் என்னை பொறுத்தமட்டில் ஷுப்மன் கில் மற்றும் ஷர்துல் தாகூர் கண்டிப்பாக இருக்கக்கூடாது. 

ஜெய் ஷா மீது பாக்.,கிரிக்கெட் வாரிய தலைவர் குற்றச்சாட்டு! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில்

ஒருநாள் உலக கோப்பைக்கான எனது  ஃபாஸ்ட் பவுலிங் தேர்வை கேட்டால், என்னை பொறுத்தமட்டில் 4 ஃபாஸ்ட் பவுலர்கள் போதுமானது. பும்ரா, உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ் ஆகிய நால்வர் தான் எனது தேர்வு. நான் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்தால் யாரை தேர்வு செய்வேன் என்பதைத்தான் கூறியுள்ளேன். நான் ஒரு ரசிகனாக கூறவில்லை. தீபக் ஹூடாவைக்கூட அணியில் எடுப்பேன். இவர்கள் எல்லாம் போட்டிகளை ஜெயித்து கொடுப்பார்கள். நமக்கு போட்டியில் ஜெயிப்பதுதானே முக்கியம். அப்படியென்றால், யூசுஃப் பதான் மாதிரியான வீரர்கள் தேவை. யூசுஃப் பதான் தனி ஒருவனாக போட்டிகளை ஜெயித்து கொடுத்திருக்கிறார். அவர் மாதிரியான வீரர் தேவை என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
 

click me!