14 ஆண்டுகளுக்கு பிறகு காலண்டர் ஆண்டில் ஒருநாள் சர்வதேச போட்டியில் 1000 ரன்களை கடந்து கேஎல் ராகுல் சாதனை!

Published : Dec 21, 2023, 07:27 PM IST

கே.எல்.ராகுல் தனது கேரியரில் முதல் முறையாக ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 1000 ரன்களை கடந்து சாதனை படைத்தார்.

PREV
17
14 ஆண்டுகளுக்கு பிறகு காலண்டர் ஆண்டில் ஒருநாள் சர்வதேச போட்டியில் 1000 ரன்களை கடந்து கேஎல் ராகுல் சாதனை!
Sai Sudharsan-KL Rahul

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு கேஎல் ராகுல் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்று இந்திய அணி சமன் செய்தது. இதைத் தொடர்ந்து தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து வருகிறது.

27
KL Rahul

இதில், நடந்து முடிந்த 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா 1-1 என்று வெற்றி பெற்று சமனில் உள்ளன. இதையடுத்து தொடரை தீர்மானிக்கும் 3 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி தற்போது போலண்ட் பார்க் பகுதியில் நடந்து வருகிறது.

37
KL Rahul 1000 Runs

இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த நிலையில் தான் 2023 ஆம் ஆண்டில் இதுவரையில் கேஎல் ராகுல் விளையாடிய 27 ஒருநாள் போட்டிகளில் 1060 ரன்கள் குவித்துள்ளார்.

47
KL Rahul 1000 Runs in Calender Year

இதன் மூலமாக 14 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ஒரே ஆண்டில் 1000 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் விக்கெட் கீப்பர் பேட்டர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும், எம்.எஸ்.தோனிக்கு பிறகு 2ஆவது இந்திய விக்கெட் கீப்பர், பேட்டராக  இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.

57
india kl Rahul

அதோடு, இந்த காலண்டர் ஆண்டில் 1000 ரன்களை கடந்த சுப்மன் கில், விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரது வரிசையில் 4ஆவது இந்திய வீரராக கேஎல் ராகுல் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

67
ODI Captain KL Rahul

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக வெளியேறிய கேஎல் ராகுல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் மூலமாக இந்திய அணியில் இடம் பெற்றார். இதையடுத்து, உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்று விளையாடி 452 ரன்கள் குவித்தார்.

77
KL Rahul

இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் ரன் குவிப்பு பட்டியலில் இந்தியாவின் பேட்டர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். கில் 1584 ரன்களுடன் முதலிடத்திலும், கோலி 1377 ரன்களுடன் 2ஆவது இடத்திலும், ரோகித் 1255 ரன்களுடன் பட்டியலில் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories