IPL Auction:ரஜினி சொன்ன நல்ல பிளேயர்ஸ எடுத்தாரா காவ்யா மாறன் – ஐபிஎல்லில் அவருடைய ரியாக்‌ஷன் எப்படி இருக்கும்?

First Published | Dec 20, 2023, 11:53 AM IST

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த உலகக் கோப்பை வின்னிங் கேப்டன் பேட் கம்மின்ஸ் அதிகபட்சமாக ரூ.20.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

IPL Auction 2024

துபாயில் ஐபிஎல் 2024 தொடருக்கான மினி ஏலம் நேற்று நடந்தது. இதில், ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கும், பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டனர். டேரில் மிட்செல் ரூ.14 கோடிக்கு சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டார்.

SRH Squad

இந்த நிலையில் தான் ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் கொஞ்சம் நல்ல பிளேயர்ஸ போடுங்க. ஐபிஎல் நல்லா போயிட்டு இருக்கு. சன்ரைசர்ஸ் மேட்ச் ஆடும் போது காவ்யா கொடுக்கிற எக்‌ஷ்பிரஷன்கள பாத்தா நமக்கு டென்ஷனாகுது. காவ்யா பாக்குறப்போ நமக்கு பிபி ஏறிடுது என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

Tap to resize

Sunrisers Hyderabad - Kavya Maran

அந்த வகையில், ரஜினிகாந்த் கூறியதைத் தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் முதல் வீரராக டிராவிஸ் ஹெட் ரூ.6.80 கோடிக்கு ஏலம் வாங்கப்பட்டார். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தவரே டிராவிஸ் ஹெட் தான். ஆனால், அவர் எப்படியு 10 கோடிக்கு மேல் வாங்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டார்.

Travis Head

ஆனால், அவரை ஏலம் எடுக்க பெரிதாக எந்த அணியும் ஏலம் எடுக்க வரவில்லை. அவருக்காக போட்டி போட்ட சிஎஸ்கே அணியும் பின்வாங்கியதைத் தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ரூ.6.80 கோடிக்கு வாங்கப்பட்டார். இவரைத் தொடர்ந்து, இலங்கை ஆல்ரவுண்டரான வணிந்து ஹசரங்காவை ரூ.1.5 கோடிக்கு வாங்கியது.

Pat Cummins

அடுத்து உலகக் கோப்பையை வென்று கொடுத்த பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு வாங்கப்பட்டார். ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரர் இத்தனை கோடிக்கு வாங்குப்பட்டது வீரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹைதராபாத் அணியில் கம்மின்ஸ் வந்ததைத் தொடர்ந்து அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்படவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

Kavya Maran - IPL 2024 Auction

அடுத்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனத்கட்டை ரூ.1.60 கோடிக்கு வாங்கியது. ஜாதவேத் சுப்பிரமணியன் ரூ.20 லட்சம் மற்றும் ஆகாஷ் சிங் ஆகியோர் கடைசியாக ரூ.20 லட்சத்திற்கு வாங்கப்பட்டனர். இதன் மூலமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பலப்படுத்தும் வகையில் ரஜினிகாந்த் கூறியதற்கு இணங்க நல்ல பிளேயர்ஸை ஏலம் எடுத்துள்ளது.

SRH Auction 2024

சன்ரைசர்ஸ் ஏலம் எடுத்த வீரர்கள்:

பேட் கம்மின்ஸ் – ஆஸ்திரேலியா – ஆல்ரவுண்டர் – ரூ.20.50 கோடி

டிராவிஸ் ஹெட் – ஆஸ்திரேலியா – பேட்ஸ்மேன் – ரூ.6.80 கோடி

ஜெயதேவ் உனத்கட் – இந்தியா – பவுலர் – ரூ.1.60 கோடி

வணிந்து ஹசரங்கா – இலங்கை – ஆல்ரவுண்டர் – ரூ.1.50 கோடி

ஜாதவேத் சுப்பிரமணியன் – இந்தியா – பவுலர் – ரூ.20 லட்சம்

ஆகாஷ் சிங் – இந்தியா – பவுலர் – ரூ.20 லட்சம்

IPL 2024 Auction

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர்கள் – 25

வெளிநாட்டு வீரர்கள் - 8

அப்துல் சமாத், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), மார்கோ ஜான்சென், ராகுல் திரிபாதி, வாஷிங்டன் சுந்தர், கிளென் பிலிப்ஸ், சன்வீர் சிங், ஹென்ரிச் கிளாசென், புவனேஷ்வர் குமார், மாயங்க் அகர்வால், டி நடராஜன், அன்மோல்ப்ரீத் சிங், மாயங்க் மார்கண்டே, உபேந்திரா சிங் யாதவ், உம்ரான் மாலிக், நிதிஷ் குமார் ரெட்டி, ஃபசல்ஹக் ஃபரூக்கி, ஷபாஸ் அக்மது, டிராவிஸ் ஹெட், வணிந்து ஹசரங்கா, பேட் கம்மின்ஸ், ஜெயதேவ் உனத்கட், ஆகாஷ் சிங், ஜாதவேத் சுப்பிரமணியன்.

kavya maran

எஸ்ஆர்ஹெச் மொத்த Available Slot: 0

எஸ்ஆர்ஹெச் வெளிநாட்டு வீரர்கள் Available Slot: 0

எஸ்ஆர்ஹெச் மீதி பர்ஸ் தொகை – ரூ.3.2 கோடி

ஏலத்திற்கு முன்னதாக பர்ஸ் தொகை ரூ.34 கோடி.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் 3 வெளிநாட்டு வீரர்கள் உள்பட மொத்தமாக 6 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். ஏலம் எடுக்கப்பட்ட பிறகு ஹைதராபாத் அணியில் மீது பர்ஸ் தொகை ரூ.3.2 கோடி உள்ளது.

Latest Videos

click me!