ஏலம் முடிஞ்சிருச்சு…நம்ம சிஎஸ்கேல ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் யார் யார்? மீதி பர்ஸ் தொகை, Available Slot?

First Published | Dec 20, 2023, 9:34 AM IST

ஐபிஎல் 2024 தொடருக்கான ஏலம் நேற்று துபாயில் உள்ள கோகோ கோலா அரேனா அரங்கத்தில் நடந்தது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 6 வீரர்களை ஏலம் எடுத்தது.

IPL CSK Auction Players List

ஒவ்வொரு ஆண்டும் பிசிசியின் மூலமாக ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், வரும் 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22 ஆம் தேதி நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது ஒரு புறம் இருக்க 2024 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலம் நேற்று துபாயில் உள்ள கோகோ கோலா அரேனா அரங்கத்தில் நடந்தது.

Shardul Thakur

இதில், ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக 24 கோடிக்கும் அதிகமாக ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அதிகபட்சமாக ரூ.24.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இதே போன்று மற்றொரு ஆஸ்திரேலியா வீரர் பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மூலமாக ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

Tap to resize

IPL CSK Players List

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நியூசிலாந்து ஆல்ரவுண்டர் டேரில் மிட்செல் அதிகபட்சமாக ரூ.14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.       மேலும், மற்றொரு நியூசிலாந்து வீரரான ரச்சின் ரவீந்திராவிற்கு ரூ.1.80 கோடி வரையில் சிஎஸ்கே செலவு செய்துள்ளது. தொடர்ந்து வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஷ்தாபிஜூர் ரஹ்மான் ரூ.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

IPL 2024 Auction

அறிமுக இளம் வீரர் சமீர் ரிஸ்வி அதிகபட்சமாக ரூ.8.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். மேலும், ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் ரூ.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். கடைசியாக ஹைதராபாத்தைச் சேர்ந்த 18 வயதான இளம் வீரர் அவனிஷ் ராவ் ஆரவெல்லி அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

CSK

சிஎஸ்கே அணியில் ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள்:

டேரில் மிட்செல் – நியூசிலாந்து – ஆல்ரவுண்டர் – ரூ.14 கோடி

சமீர் ரிஸ்வி – இந்தியா – பேட்ஸ்மேன் – ரூ.8.40 கோடி

ஷர்துல் தாக்கூர் – இந்தியா – ஆல்ரவுண்டர் – ரூ.4 கோடி

முஷ்தாபிஜூர் ரஹ்மான் – வங்கதேசம் – பவுலர் – ரூ.2 கோடி

ரச்சின் ரவீந்திரா – நியூசிலாந்து – ஆல்ரவுண்டர் – ரூ.1.40 கோடி

அவனிஷ் ராவ் ஆரவெல்லி – இந்தியா – விக்கெட் கீப்பர் – ரூ.20 லட்சம்

CSK Auction Players List

ஏலம் எடுக்கப்பட்ட பிறகு சிஎஸ்கே வீரர்கள்: - 25,

எம்.எஸ்.தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), மொயீன் அலி, தீபக் சாகர், டெவோன் கான்வே, துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, மதீஷா பதிரனா, அஜிங்க்யா ரகானே, ஷேக் ரஷீத், மிட்செல் சாண்ட்னர், சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரஷாந்த் சோலாங்கி, மகீஷ் தீக்‌ஷனா, ரச்சின் ரவீந்திரா, ஷர்துல் தாக்கூர், டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி, அவனிஷ் ராவ் ஆரவெல்லி, முஷ்தாபிஜூர் ரஹ்மான்

Avanish Rao Aravelly

சிஎஸ்கே மொத்த Available Slot: 0

சிஎஸ்கே வெளிநாட்டு வீரர்கள் Available Slot: 0

சிஎஸ்கே மீதி பர்ஸ் தொகை – ரூ.1 கோடி

ஏலத்திற்கு முன்னதாக பர்ஸ் தொகை ரூ.31.4 கோடி.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 3 வெளிநாட்டு வீரர்கள் உள்பட மொத்தமாக 6 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். ஏலம் எடுக்கப்பட்ட பிறகு சிஎஸ்கே அணியில் மீது பர்ஸ் தொகை ரூ.1 கோடி உள்ளது.

Latest Videos

click me!