பும்ரா விமான நிலையத்துக்கு வந்தபோது அவரை பார்த்த ரசிகர் ஒருவர் தனது செல்போனில் செல்பி எடுக்க முயன்றுள்ளார். அப்போது பும்ரா அவரிடம் வீடியோ எடுக்க வேண்டாம் என கூறியுள்ளார். ஆனால் அதையும் மீறி அந்த ரசிகர் வீடியோ செல்பி எடுத்ததால் ஆத்திரம் அடைந்த பும்ரா அவரின் செல்போனை உடனே புடுங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர் கதிகலங்கிப் போனார்.
பும்ராவுக்கு ஆதரவாக, எதிராக கருத்து
சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியோ லக்னோ விமான நிலையத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, பும்ராவின் செயலை சிலர் விமர்சித்தாலும், மற்ற சிலர் அவருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.