ஆஃப் ஸ்பின் போட்டு விக்கெட் வீழ்த்திய பும்ரா.. விக்கெட் கீப்பிங்கிலும் அசத்தல்.. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்

Published : Jan 02, 2026, 08:19 PM IST

கடந்த 2025ம் ஆண்டு ஜஸ்பிரித் பும்ராவுக்கு தித்திப்பாக அமைந்தது. 21 டெஸ்ட் போட்டிகளில் 45 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது சராசரி 21.77 மற்றும் எகானமி ரேட் 3.44 ஆகும். 

PREV
14
கல்லுரி காலங்களை நினைவு கூர்ந்த ஜஸ்பிரித் பும்ரா

இந்திய அணியின் முன்னணி பவுலர் ஜஸ்பிரித் பும்ரா. தனது யார்க்கர் பவுலிங் மூலமும், சாதுர்யமான ஸ்லோ பவுலிங் மூலம் முன்னணி பேட்ஸ்மேன்களையே ஆட்டம் காண வைத்து வரும் பும்ரா, உலகின் மிகச்சிறந்த பவுலராக விளங்கி வருகிறார். இந்த நிலையில், கல்லூரி காலத்தில் தான் ஆஃப் ஸ்பின் வீசியதாகவும், விக்கெட் கீப்பராக இருந்ததாகவும் பும்ரா நினைவு கூர்ந்துள்ளார்.

24
ஆஃப் ஸ்பின் வீசினேன்; விக்கெட் கீப்பிங் செய்தேன்

ஐபிஎல் பயிற்சி அமர்வின் போது பும்ரா விக்கெட் கீப்பிங் கையுறைகளை அணிந்திருந்த வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டது. அந்த வீடியோவில், வழக்கமாக பந்தை வைத்து மிரட்டும் பும்ரா, கைகளில் விக்கெட் கீப்பிங் கையுறைகளை அணிந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளித்தார்.

 அப்போது பேசிய பும்ரா, ''கல்லூரிப் போட்டி ஒன்றில், என் பல்கலைக்கழகத்திற்காக, நான் ஆஃப் ஸ்பின் வீசினேன், விக்கெட் கீப்பிங் செய்து ஒரு ஸ்டம்பிங்கும் செய்தேன். ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்தேன். நான் ஒரு ஆல்ரவுண்டராக இருந்தேன்'' என்று பசுமையான நாட்களை நினைவு கூர்ந்துள்ளார்.

34
ரசிகர்களின் வேடிக்கையான கமெண்ட்

ஜஸ்பிரித் பும்ரா கைகளில் விக்கெட் கீப்பிங் கையுறைகளை அணிந்திருப்பதை பார்க்கும் ரசிகர்கள் வேடிக்கையான கமெண்ட்களை பதிவு செய்கின்றனர். ''நல்ல வேளை பும்ரா இப்பவும் ஸ்பின் போடவில்லை. போட்டிருந்தால் முன்னணி இந்திய ஸ்பின் பவுலர்கள் வீட்டுக்கு போக வேண்டியது தான். இதேபோல் விக்கெட் கீப்பராகவும் இருந்திருந்தால் சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட் இடமெல்லாம் காலியாகியிருக்கும்'' என்று தெரிவித்து வருகின்றனர்.

44
2025 பும்ராவுக்கு தித்திப்பான ஆண்டு

கடந்த 2025ம் ஆண்டு பும்ராவுக்கு தித்திப்பாக அமைந்தது. 21 டெஸ்ட் போட்டிகளில் 45 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது சராசரி 21.77 மற்றும் எகானமி ரேட் 3.44 ஆகும். 25 இன்னிங்ஸ்களில் மூன்று முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 ஆசியக்கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக விளங்கினார். ஐபிஎல் 2025 சீசனை பொறுத்தவரை மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்று எட்ட உதவினார். 12 போட்டிகளில் 17.55 சராசரியுடன் 18 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

2026ல் பெரும் சாதனைக்கு 14 விக்கெட்டே தேவை

இதில் ஒரு ஐந்து விக்கெட் ஹாலும் அடங்கும். 2026ம் ஆண்டில் 500 சர்வதேச விக்கெட்டுகளை நிறைவு செய்யும் எட்டாவது இந்திய பந்துவீச்சாளர் மற்றும் நான்காவது இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை எட்டுவதற்கு பும்ராவுக்கு இன்னும் 14 விக்கெட்டுகளே தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories