'இந்தியாவில் கால் வைத்தால்'.. KKR வங்கதேச வீரருக்கு பாஜக மிரட்டல்.. ஷாருக்கான் தேசத் துரோகி.. விமர்சனம்!

Published : Jan 02, 2026, 03:47 PM IST

ஷேக் ஹசீனா பிரதமராக இருந்தபோது வங்கதேசம் இந்தியா பக்கம் இருந்தது. ஆனால் முகமது யூனுஸ் இடைக்கால தலைவர் ஆனதும் வங்கதேசம் சீனாவுடன் கைகோர்த்து இந்தியாவுக்கு எதிராக திரும்பியுள்ளது.

PREV
15
KKR அணியில் வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான்

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் 2026 சீசன் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் அபுதாபியில் கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி நடந்தது. இந்த ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வங்கதேச அணியின் இடது கை பாஸ்ட் பவுலர் முஸ்தாபிசுர் ரஹ்மானை 9.2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

25
முஸ்தாபிசுர் ரஹ்மான் ஐபிஎல் விளையாட எதிர்ப்பு

இந்த நிலையில், முஸ்தாபிசுர் ரஹ்மானை தனது அணியில் எடுத்த கொல்கத்தா அணியின் உரிமையாளரும், நடிகருமான ஷாருக்கான் ஒரு துரோகி என்று பாஜக படுபயங்கர குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது. 

பாஜக மட்டுமின்றி சிவசேனா கட்சியும் வ‌ங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை உடனே கொல்கத்தா அணியில் இருந்து நீக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிராக அரசியல் கட்சிகள் திடீரென பொங்கியெழுவதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

35
வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல்

அதாவது வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனிஸ் தலைமையில் இடைக்கால அரசு நடந்து வரும் நிலையில், அங்கு சமீபகாலமாக சிறுபான்மையினராக இந்துக்கள் மீது தொடர் தாக்குதல் நடந்து வருகிறது. இந்து கோயில்கள் சேதப்படுத்தப்படுவது மட்டுமின்றி, இந்துக்கள் கொடூரமாக தாக்கப்படுகின்றனர். 

சில இந்துக்கள் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஷேக் ஹசீனா பிரதமராக இருந்தபோது வங்கதேசம் இந்தியா பக்கம் இருந்தது. ஆனால் முகமது யூனிஸ் இடைக்கால தலைவர் ஆனதும் வங்கதேசம் சீனாவுடன் கைகோர்த்து இந்தியாவுக்கு எதிராக திரும்பியுள்ளது. அங்கு இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

45
முஸ்தாபிசுர் ரஹ்மானை உடனே நீக்க வேண்டும்

இப்படியாக வங்கதேசத்தில் இந்துக்கள் குறிவைத்து தாக்கப்படுவதால் ஐபிஎல் கிரிக்கெட்டில் எந்த ஒரு வங்கதேச வீரரும் விளையாடக் கூடாது என கோரிக்கை எழுந்துள்ளது. ஆகையால் தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள முஸ்தாபிசுர் ரஹ்மானை உடனே நீக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

''வங்கதேச வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் இந்திய மண்ணில் விளையாட அனுமதிக்கப்படக் கூடாது. இந்துக்கள் மீது வங்கதேசம் வெறுப்புணர்வை கொண்டுள்ளது. ஷாருக்கான் உடனடியாக வங்கதேச வீரரை கொல்கத்தா அணியில் இருந்து நீக்க வேண்டும்.

 இவ்வளவு எதிர்ப்புகளுக்குப் பிறகும் அவர் இதைச் செய்யவில்லை என்றால், அவர் இந்த நாட்டில் வாழ்ந்து, இங்கு பணம் சம்பாதித்தாலும், இந்த நாட்டின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவில்லை என்பது நிரூபணமாகும்'' என்று சிவசேனா தெரிவித்துள்ளது.

55
ஷாருக்கான் துரோகி பாஜக விமர்சனம்

இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் ஒருபடி மேலே போய் ஷாருக்கானை துரோகி என்று விமர்சித்துள்ளது. இது தொடர்பாக பாஜக தலைவர் சங்கீத் சோம், ''வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள். ஆனால் ஷாருக்கான் போன்ற தேசத்துரோகிகள் 9 கோடி ரூபாய் கொடுத்து வங்கதேச வீரரை வாங்கி அவர்களுக்கு உதவுகிறார்கள். இவர்களுக்கு இந்த நாட்டில் வாழ எந்த உரிமையும் இல்லை'' என்றார்.

முஸ்தாபிசூருக்கு மிரட்டல்

தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக முஸ்தாபிசூர் இந்தியா வந்தால் அவர் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டிய சங்கீத், அவரை விமான நிலையத்தை விட்டு வெளியே கூட அனுமதிக்க மாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories