தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விளையாடாததால் ருத்ராஜ்க்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட அவர் சதம் அடித்து தான் யாரென்று நிரூபித்தார்.
இந்திய அணியின் இளம் வீரர் சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் விஜய் ஹசாரே டிராபி தொடரில் சூப்பர் சதம் அடித்து அசத்தியுள்ளார். மகாராஷ்டிரா அணிக்காக களமிறங்கிய ருத்ராஜ் உத்தரகாண்ட் அணிக்கு எதிரான போட்டியில் 113 பந்துகளில் 125 ரன்கள் விளாசினார். இவர் மொத்தம் 12 பவுண்டரிகளையும், 3 சிக்சர்களையும் நொறுக்கினார்.
24
இந்திய அணியில் கம்பேக்
ருத்ராஜ் கெய்க்வாட்டின் அதிரடி ஆட்டத்தால் மகாராஷ்டிரா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 331 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் இடம்பிடிக்க போராடிக் கொண்டிருந்த ருத்ராஜ், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் மூலம் இந்திய அணியில் கம்பேக் கொடுத்தார்.
ராய்ப்பூரில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 83 பந்துகளில் 105 ரன்கள் குவித்து தனது முதல் ஒருநாள் சதத்தை அடித்து அசத்தினார்.
34
நியூசிலாந்து தொடரில் இடம் கிடைக்குமா?
இந்த நிலையில், இந்தியா, நியூசிலாந்து இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. நியூசிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், ஓடிஐ தொடருக்கான அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் இப்போது சதம் அடித்துள்ள ருத்ராஜ் கெய்க்வாட்டுக்கு அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விளையாடாததால் ருத்ராஜ்க்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட அவர் சதம் அடித்து தான் யாரென்று நிரூபித்தார்.
அத்துடன் இப்போது விஜய் ஹசாரே டிராபியிலும் சதம் அடித்துள்ளார். மேலும் ஷ்ரேயாஸ் ஐயர் முழு உடல்தகுதி பெறாததால் நியூசிலாந்துக்கு எதிரான ஓடிஐ தொடரில் இடம்பெற வாய்ப்பில்லை. ஆகவே ருத்ராஜ் கெய்க்வாட்டுக்கு இந்திய ஓடிஐ அணியில் இடம் கிடைப்பது உறுதியாகியுள்ளதால் சிஎஸ்கே ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.