ENG vs NZ: டெஸ்ட்டில் ஆண்டர்சன் - பிராட் இணைந்து 1000 விக்கெட்டுகள்..! டெஸ்ட் வரலாற்றில் மாபெரும் சாதனை

First Published | Feb 17, 2023, 3:27 PM IST

டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 விக்கெட்டுகளை இணைந்து வீழ்த்திய 2வது பவுலிங் ஜோடி என்ற அபாரமான சாதனையை ஆண்டர்சன் - பிராட் ஜோடி படைத்துள்ளது.
 

நியூசிலாந்து - இங்கிலாந்து இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 325 ரன்களை குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி, டாம் பிளண்டெலின் அபாரமான சதத்தால் (138) முதல் இன்னிங்ஸில் 306 ரன்களை குவித்தது. 

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் சீனியர் ஃபாஸ்ட் பவுலர்களான ஆண்டர்சன் ஒரு விக்கெட்டும், ஸ்டூவர்ட் பிராட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இருவரும் இணைந்து இந்த போட்டியில் வீழ்த்திய 4 விக்கெட்டுகளுடன், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருவரும் இணைந்து 1000 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினர். டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 விக்கெட்டுகளை இணைந்து வீழ்த்திய 2வது பவுலிங் ஜோடி என்ற சாதனையை ஆண்டர்சன் - பிராட் ஜோடி படைத்துள்ளது.

செல்ஃபி எடுக்க மறுத்த பிரித்வி ஷா கார் மீது தாக்குதல்..! போலீஸார் வழக்குப்பதிவு

Tap to resize

இந்த மைல்கல்லை எட்டிய முதல் பவுலிங் ஜோடி, ஆஸ்திரேலியாவின் மெக்ராத் - ஷேன் வார்ன் ஜோடி ஆகும். மெக்ராத் - ஷேன் வார்ன் ஜோடி 104 டெஸ்ட் போட்டிகளில் இணைந்து ஆடி 1001 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். அவர்களுக்கு அடுத்து இந்த மைல்கல்லை எட்டிய 2வது ஜோடி என்ற பெருமையை பெற்றுள்ள ஆண்டர்சன் - பிராட் ஜோடி, மெக்ராத் - ஷேன் வார்ன் ஜோடியை முந்தி முதலிடத்தை பிடித்துவிடும்.
 

2003ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஜேம்ஸ் ஆண்டர்சன், 20 ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடிய முதல் ஃபாஸ்ட் பவுலர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். ஒரு ஃபாஸ்ட் பவுலராக 20 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடுவது மிகக்கடினமான காரியம். அதை சாதித்து காட்டியிருக்கிறார் ஆண்டர்சன்.

178 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 677 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஆண்டர்சன், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய 3வது பவுலர் ஆவார். டெஸ்ட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய ஃபாஸ்ட் பவுலர்களில் முதலிடத்தில் உள்ளார். இவரது ரெக்கார்டை இனி ஒரு ஃபாஸ்ட் பவுலர் முறியடிப்பது என்பது மிகக்கடினமான காரிய்ம்.

IND vs AUS: ஜெயிச்சே தீரணும்.. 2வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸி., அணியில் தாறுமாறான மாற்றங்கள்.! உத்தேச ஆடும் லெவன்

ஸ்டூவர்ட் பிராடும் இங்கிலாந்தின் மிக சீனியர் பவுலர். டெஸ்ட்டில் 567 விக்கெட் வீழ்த்தியுள்ள ஸ்டூவர்ட் பிராட், அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் 5ம் இடத்தில் உள்ளார். ஃபாஸ்ட் பவுலர்களில் ஆண்டர்சனுக்கு அடுத்து 2ம் இடத்தில் உள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்திவருகின்றனர்.

Latest Videos

click me!