இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்த சேத்தன் சர்மா!

First Published Feb 17, 2023, 12:39 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
 

சேத்தன் சர்மா ராஜினாமா

கடந்த 1966 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் லுதியானாவில் பிறந்தவர் சேத்தன் சர்மா. இவர், தனது 17ஆவது வயதில் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு பெற்றார். வேகப்பந்து வீச்சாளரான சேத்தன் சர்மா கடந்த 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி 19ஆவது வயதில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.
 

சேத்தன் சர்மா

தனது 24 ஆவது வயதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இதே போன்று தனது 18ஆவது வயதில் கடந்த 1983 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் விளையாடினார். அதே அணிக்கு எதிராக 1994 ஆம் ஆண்டு கடைசியாக ஒரு நாள் போட்டியில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வுக்குழு தலைவர் பதவி

ஆனால், சேத்தன் சர்மா ஒரு டி20 போட்டியில் கூட பங்கேற்கவில்லை. கடந்த 1985 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான தொடரில் 3 டெஸ்ட் போட்டியில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அடுத்த ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டியில் 16 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
 

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவி ராஜினாமா

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு கிரிக்கெட் வர்ணனையாளராக சேத்தன் சர்மா சிறந்து விளங்கினார். இதையடுத்து, கடந்த 2020 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த 2022 ஆம் ஆண்டு மீண்டும் தேர்வுக்குழு தலைவரானார். இந்த நிலையில், தற்போது தேர்வுக்குழு தலைவர் பதவியை சேத்தன் சர்மா ராஜினாமா செய்துள்ளார்.

சேத்தன் சர்மா தலைவர் பதவி ராஜினாமா

கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சியில் நடந்த ஸ்டிங் ஆபரேஷனில் பேசிய சேத்தன் சர்மா தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வந்தார். விராட் கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிட்டு ரோகித் சர்மாவுக்கு கேப்டன் பதவி கொடுத்தது, விராட் கோலி, முன்னாள் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இடையிலான கருத்து வேறுபாடு, ஜஸ்ப்ரித் பும்ரா முழு உடல் தகுதியுடன் இருந்தும் அணியில் இடம் பெறாதது, ஹர்திக் பாண்டியா மற்றும் ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் தனது 
வீட்டிற்கு வந்து பேசிவிட்டு செல்வார்கள்.

சேத்தன் சர்மா

அது யாருக்கும் தெரியாது. நாங்கள் பேசியது எங்கள் வீட்டை விட்டு கூட வெளியில் வராது என்பது உள்ளிட்ட பலவற்றை பேசியது பெரும் சர்ச்சையான நிலையில், தற்போது தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சேத்தன் சர்மாவின் ராஜினாமா கடிதத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஏற்றுக் கொண்டுள்ளார்.
 

click me!