இந்து முறைப்படி மாலை மாற்றி திருமணம் செய்த ஹர்திக் பாண்டியா - வைரலாகும் திருமண புகைப்படங்கள்!

First Published Feb 17, 2023, 11:33 AM IST

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டோன்கோவிச் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஹர்திக் பாண்டியா - நடாசா ஸ்டோன்கோவிச்

ஹர்திக் பாண்டியாவிற்கும், பாலிவுட் நடிகையான நடாசா ஸ்டோன்கோவிச்சுக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், அதன் பிறகு ஜூலை 30 ஆம் தேதி இவர்களுக்கு அகஸ்தியா என்ற ஒரு மகன் பிறந்தான்.

ஹர்திக் பாண்டியா - நடாசா ஸ்டோன்கோவிச் திருமணம்

மகன் பிறந்து 7 மாதம் கழித்து ஹர்திக் பாண்டியா மற்றும் நடாசா ஸ்டோன்கோவிச் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். உதய்பூரில் உள்ள நீதிமன்றத்தில் வைத்து ஹர்திக் பாண்டியா மற்றும் நடாசா திருமணம் நடந்துள்ளது.

ஹர்திக் பாண்டியா - நடாசா ஸ்டோன்கோவிச்

அப்போது நாட்டையே அச்சுறுத்தி வந்த கொரோனா காரணமாக லாக்வுடன் போடப்பட்டிருந்த நிலையில், மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்தனர். தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் நடந்து வருகிறது. டெஸ்ட் தொடரில் இடம் பெறாத ஹர்திக் பாண்டியா ஓய்வில் இருந்து வருகிறார்.

ஹர்திக் பாண்டியா - நடாசா ஸ்டோன்கோவிச்

இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா மற்றும் நடாசா ஸ்டோன்கோவிச் இருவரும் காதலர் தினத்தை முன்னிட்டு மறுபடியும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். கடந்த 13 ஆம் தேதியே இவர்களது சங்கீத நிகழ்ச்சி, மெஹந்தி நிகழ்ச்சியும் பிரமாண்டமாகவே தொடங்கியது.

ஹர்திக் பாண்டியா - நடாசா ஸ்டோன்கோவிச்

உதய்பூரில் 5 நட்சத்திர ஹோட்டலில் வைத்து நடந்த ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டோன்கோவிச் திருமண நிகழ்ச்சிக்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் வந்திருந்து புதுமண தம்பதியினரை வாழ்த்தியுள்ளனர். 

ஹர்திக் பாண்டியா - நடாசா ஸ்டோன்கோவிச்

இந்த திருமண நிகழ்ச்சியில் ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டோன்கோவிச் இருவரும் டான்ஸ் ஆடி அசத்தியுள்ளனர். பிப்.13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையில் நடந்த இந்த  திருமண நிகழ்ச்சியில் மெஹந்தி, சங்கீதா நிகழ்ச்சியும், ஹல்தி எனப்படும் மஞ்சள் பூசும் விழாவும் நடக்கிறது. 

ஹர்திக் பாண்டியா - நடாசா ஸ்டோன்கோவிச்

ஹர்திக் பாண்டியா நடாசா ஸ்டோன்கோவிச்சின் 3 வயது குழந்தை அகஸ்தியாவும் இந்த திருமண நிகழ்ச்சியில் இருந்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது. மிக பிரமாண்டமாக நடந்த இந்த திருமண நிகழ்ச்சியில் ஹர்திக் பாண்டியா கோட் சூட்டிலும், நடாஷா ஸ்டோன்கோவிச் வெள்ளை நிற உடையில் அழகாக இருந்தனர்.

ஹர்திக் பாண்டியா - நடாசா ஸ்டோன்கோவிச்

இந்த திருமணம் குறித்து ஹர்திக் பாண்டியா கூறியிருப்பதாவது: 3 வருடங்களுக்கு முன்பு எடுத்த சபதத்தை புதுப்பித்து இந்த காதல் தீவில் காதல தினத்தை கொண்டாடினோம். எங்கள் அன்பைக் கொண்டாட எங்களுடன் எங்கள் குடும்பத்தினரும் நண்பர்களும் இருப்பது உண்மையில் நாங்கள் பாக்கியவான்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
 

ஹர்திக் பாண்டியா - நடாசா ஸ்டோன்கோவிச்

திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா வலம் வருகிறார். கடந்த சீசனில் அறிமுகமான குஜராத் அணி முதல் சீசனிலேயே டிராபியை தட்டிச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹர்திக் பாண்டியா - நடாசா ஸ்டோன்கோவிச்

காதலர் தினத்தன்று கிறிஸ்துவ முறைப்படி நடந்த இந்த திருமணத்தைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியா மற்றும் நடாசா ஸ்டான்கோவிச் இருவரும் இந்து முறைப்படி மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

ஹர்திக் பாண்டியா - நடாசா ஸ்டோன்கோவிச் திருமண புகைப்படங்கள்

இந்து முறைப்படி நடந்த திருமணத்தில் நடாசா சிவப்பு நிற உடை அணிந்து கழுத்தில் மாலையுடன் காணப்பட்டார். குஜராத் பழக்க வழக்கப்படி ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிச் திருமணம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிந்த ஹர்திக் பாண்டியா இப்பொழுது மற்றும் எப்பொழுதும் என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!