100ஆவது டெஸ்டில் புஜாரா: 2ஆவது டெஸ்ட்டில் டாஸ் வென்ற ஆஸி, பேட்டிங்!

Published : Feb 17, 2023, 09:36 AM ISTUpdated : Feb 17, 2023, 09:38 AM IST

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.  

PREV
17
100ஆவது டெஸ்டில் புஜாரா: 2ஆவது டெஸ்ட்டில் டாஸ் வென்ற ஆஸி, பேட்டிங்!
Image credit: PTI

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடந்தது. இதில், இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 

27
Image credit: PTI

இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி இன்று டெல்லியில் நடக்கிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். ஆஸ்திரேலியா அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 

37
Image credit: PTI

மேட் ரென்ஷாவிற்குப் பதிலாக டிரேவிஸ் ஹெட் மற்றும் ஸ்காட் போலந்திற்கு பதிலாக மேத்யூ குன்மேன் அணியில் இடம் பெற்றுள்ளனர். மேத்யூ குன்மேனிற்கு இது முதல் டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

47
Image credit: PTI

அதே போன்று இந்திய அணியிலும், முதல் டெஸ்ட் போட்டியின் மூலம் தனது முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான சூர்யகுமார் யாதவ்விற்குப் பதிலாக காயம் காரணமாக ஓய்வில் இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் இந்தப் போட்டியில் களமிறங்கியுள்ளார். இந்திய அணியின் வீரர் சட்டீஸ்வர் புஜாரா தனது 100ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுகிறார். 
 

57

100ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் 13 ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை புஜாரா பெற்றுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், புஜாராவிற்கு 100ஆவது டெஸ்ட் போட்டிக்கான கேடமும், புதிய கேப்பையும் பரிசாக அளித்தார். இந்திய அணியினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 
 

67
Image credit: PTI

இந்த டெஸ்ட் போட்டியில் விராட் கோலில் 52 ரன்கள் எடுத்தால் சர்வதேச கிரிக்கெட்டில் 25 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.  ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா இந்தப் போட்டியில் வெற்றி பெற கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

77
Image credit: PTI

ஆஸ்திரேலியா:

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பீட்டர் ஹேண்ட்கோம்ப், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), நேதன் லயன், டாட் மர்ஃபி மற்றும் மேத்யூ குன்மேன்

இந்தியா:

ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், சட்டீஸ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரீகர் பரத் (விக்கெட் கீப்பர்), அக்‌ஷர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ்

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories