IND vs AUS: ஜெயிச்சே தீரணும்.. 2வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸி., அணியில் தாறுமாறான மாற்றங்கள்.! உத்தேச ஆடும் லெவன்

First Published | Feb 16, 2023, 9:21 PM IST

இந்தியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
 

australia team

முதல் போட்டியில் படுதோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி 2வது டெஸ்ட்டில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் சரியான அணி காம்பினேஷனை தேர்வு செய்யவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் ஏமாற்றமளித்த சில வீரர்கள் 2வது டெஸ்ட்டில் நீக்கப்பட்டு, அணி காம்பினேஷனில் சில மாற்றங்கள் செய்யப்படலாம்.

100வது டெஸ்ட்டில் ஆடும் புஜாரா..! 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய இந்திய வீரர்கள் பட்டியல்
 

Tap to resize

முதல் போட்டியில் ஆடிய மேட் ரென்ஷாவிற்கு பதிலாக டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட் சேர்க்கப்படுவார். டிராவிஸ் ஹெட் தான் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். முதல் போட்டியில் அவர் பென்ச்சில் உட்காரவைக்கப்பட்டார். அவர்ஆடாததால்  முதல் போட்டியில் ஸ்மித், லபுஷேனுக்கு பிறகு அந்த அணியின் பேட்டிங் ஆர்டர் சரிந்தது. அதனால் நாளை டெல்லியில் தொடங்கும் 2வது டெஸ்ட்டில் டிராவிஸ் ஹெட் ஆடுவர்.
 

முதல் போட்டியில் ஆடிய பேட்டிங் ஆல்ரவுண்டர் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப்பிற்கு பதிலாக ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீன் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டிலும் ஒரு மாற்றம் செய்யப்படும். ஸ்காட் போலந்துக்கு பதிலாக மிட்செல் ஸ்டார்க் சேர்க்கப்படுவார்.

வெஸ்ட் இண்டீஸ் வெள்ளைப்பந்து அணிகளுக்கு தனித்தனி கேப்டன்கள் நியமனம்..! 3 ஃபார்மட்டுக்கும் 3 கேப்டன்கள்

உத்தேச ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன், டாட் மர்ஃபி.
 

Latest Videos

click me!