இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்திய அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
24
2வது டெஸ்ட் போட்டி நாளை(பிப்ரவரி 17) டெல்லியில் தொடங்குகிறது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேற இந்திய அணிக்கு இது முக்கியமான தொடர் என்பதால் 2வது டெஸ்ட்டிலும் வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.
2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்படும். முதல் போட்டியில் காயம் காரணமாக ஆடாத ஷ்ரேயாஸ் ஐயர், 2வது டெஸ்ட்டில் விளையாட பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது. அதனால் முதல் போட்டியில் அவருக்கு பதிலாக 5ம் வரிசையில் பேட்டிங் ஆடிய சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டு 2வது டெஸ்ட்டில் ஷ்ரேயாஸ் ஐயர் ஆடுவார்.