வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் கேப்டனாக தொடக்க வீரர் கிரைக் பிராத்வெயிட் செயல்பட்டுவருகிறார். டி20 மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டனாக அதிரடி வீரர் நிகோலஸ் பூரன் செயல்பட்டுவந்தார்.
டி20 உலக கோப்பைக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னும் வெள்ளைப்பந்து கிரிக்கெட் தொடர்களில் ஆடாத நிலையில், ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணியின் கேப்டனாக ஷேய் ஹோப் மற்றும் டி20 அணியின் கேப்டனாக ரோவ்மன் பவல் ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். டெஸ்ட் அணியின் கேப்டனாக கிரைக் பிராத்வெயிட் செயல்பட்டுவரும் நிலையில், வெஸ்ட் இண்டீஸ் டி20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கு தனித்தனி கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.