ஹர்திக் பாண்டியா டி20 அணியின் முழுநேர கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக பார்க்கப்படும் நிலையில், அதுகுறித்து பேசிய இர்ஃபான் பதான், ஹர்திக் பாண்டியா ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணியையும் சரி, இந்திய அணியையும் சரி, ஒரு கேப்டனாக சிறப்பாக வழிநடத்தினார். அவர் களத்தில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுகிறார். அவரது கேப்டன்சியில் கம்யூனிகேஷனும் நன்றாக இருக்கிறது. ஆனால் அவரை முழுநேர கேப்டனாக நியமிப்பதென்றால், அவரது ஃபிட்னெஸை இந்திய அணி நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவருக்கு முதுகில் பிரச்னை உள்ளது. எனவே அவரை கேப்டனாக நியமித்தால், அனைத்து போட்டிகளிலும் ஆடவேண்டும். அதற்கு அவரது ஃபிட்னெஸ் ஒத்துழைக்க வேண்டும். அவரது ஃபிட்னெஸில் அணி நிர்வாகம் தீவிர கவனம் செலுத்தவேண்டும் என்று இர்ஃபான் பதான் தெரிவித்தார்.