ஐபிஎல் வரலாற்றில் அதிகம் சொத்து சேர்த்த இந்திய வீரர்கள்; எம்.எஸ். தோனி இருக்கிறாரா?

First Published Sep 13, 2024, 8:08 PM IST

2008 ஆம் ஆண்டிலிருந்து இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வீரர்களின் வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது. ரோஹித் சர்மா அதிக வருவாய் ஈட்டுபவராக முதலிடத்தில் உள்ளார். அதைத் தொடர்ந்து எம்எஸ் தோனி, விராட் கோலி ஆகியோர் உள்ளனர். 

ஐபிஎல் 2025 - மும்பை இந்தியன்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஆண்டுதோறும் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. தொடக்க சீசனில் இருந்தே லீக் போட்டிகளில் மட்டுமல்லாமல் வீரர்களின் வருமானமும் அதிகரித்து வந்துள்ளது. ஐபிஎல்-லை பணக்காரர்களின் விளையாட்டு என்றும் சொல்லலாம். ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது ஒவ்வொரு வீரரின் கனவு.

ஐபிஎல் 2025, ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா 2011 முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 முறை கோப்பையை வென்ற முதல் கேப்டன் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் மொத்தம் 17 சீசன்களில் விளையாடி ரோஹித் சர்மா 178.6 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். இன்சைடு ஸ்போர்ட் நடத்திய ஆய்வு அறிக்கையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஐபிஎல் தொடர்கள் மூலம் அதிகம் சம்பாதித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா முதலிடத்தில் உள்ளார்.

Latest Videos


எம்எஸ் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ்

இரண்டாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி உள்ளார். இவரது வருமானமும் ரோஹித் சர்மாவுக்கு சமமாக தான் இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இணையாக சிஎஸ்கே அணிக்காக 5 முறை கோப்பையை வென்றுள்ளார். சிஎஸ்கே அணிக்காக விளையாடிய தோனி மொத்தம் 176.8 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்.

விராட் கோலி, ஆர்சிபி

2008 முதல் 2024 வரை ஒரே அணிக்காக விளையாடிய ஒரே வீரர் கோலி. 2008 முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி, ஏலத்துக்கு சென்றிருந்தால் ஒரு சாதனையை முறியடித்திருப்பார். ஆனால், இதுவரை அவர் ஏலத்துக்கு செல்லவில்லை. இருப்பினும், 17 ஆண்டுகளில் விராட் கோலி மொத்தம் 173.2 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்.

click me!