RCB vs GT: ஐபிஎல் 2026 தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டியில் குஜாரத் டைட்டன்ஸ் அணியை பந்தாடிய ஆர்சிபி அணி பைனலுக்கு சென்று சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து 2வது முறையாக பைனலில் நுழைந்து கெத்து காட்டியுள்ளது.
ஐபிஎல் 2026 தொடரின் முதல் குவாலிஃபயரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்ற ஆர்சிபி அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் சென்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செயத ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் குவித்தது. குஜராத் பவுலர்களை கதற விட்ட ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் வெறும் 33 பந்துகளில் 9 சிக்சர், 5 பவுண்டரியுடன் 93 ரன்கள் நொறுக்கினார். விராட் கோலி 25 பந்துகளில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 43 ரன்கள் அடித்தார். குர்னால் பாண்ட்யாவும் 43 ரன்கள் அடித்தார். ஆர்சிபி அணி ஐபிஎல் பிளே-ஆஃப் போட்டிகளின் வரலாற்றிலேயே பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த ஸ்கோர் இதுவாகும்.
23
குஜராத் டைட்டன்ஸ் படுதோல்வி
பின்பு இமாலய இலக்கை நோக்கி ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.3 ஓவரில் 162 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகி 92 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அந்த அணி ஒரு கடட்த்தில் 88/8 என பரிதவித்த நிலையில், ராகுல் தெவாட்டியா 43 பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் 68 ரன்கள் அடித்து அவுட் ஆனார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாய் சுதர்சன் (14), சுப்மன் கில் (2), ஜோஸ் பட்லர் (29) சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். ஆர்சிபி தரப்பில் ஜேக்கப் டபி 3 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார், ராசிக் சலாம், குர்னால் பாண்ட்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
33
ஐபிஎல் 2026 பைனலுக்கு சென்ற ஆர்சிபி
இந்த மெகா வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி ஐபிஎல் 2026 தொடரின் பைனலுக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது. கடந்த 2025 சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி இப்போது தொடர்ந்து 2வது முறையாக பைனலுக்கு சென்று சாதனை படைத்துள்ளது. குஜராத் அணி இந்த போட்டியில் தோற்றாலும் இன்னொரு வாய்ப்பு இருக்கிறது. அந்த அணி எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்ற அணியுடன் இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் விளையாடும். அதில் வெற்றி பெறும் அணிகள் பைனலுக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.