இந்த ஆட்டத்தின் மூலம், IPL பிளேஆஃப் போட்டிகளில் தனது சாதனையை மேலும் மெருகேற்றியுள்ளார் படிதார். இதுவரை 6 பிளேஆஃப் இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர், 112.66 என்ற அபாரமான சராசரியுடன் 338 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 193.14. இதில் ஒரு சதம் மற்றும் இரண்டு அரைசதங்கள் அடங்கும். குறிப்பாக, 2022 சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் அவர் அடித்த 112* ரன்கள், RCB பேட்ஸ்மேன்களின் மிகச்சிறந்த ஆட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
பிளேஆஃப் போட்டிகளில் மட்டும் 24 சிக்சர்கள்
IPL பிளேஆஃப் போட்டிகளில் இதுவரை 25 ஃபோர்கள் மற்றும் 24 சிக்ஸர்களை விளாசியுள்ளார் படிதார். பிளேஆஃப் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சுரேஷ் ரெய்னா (40), எம்.எஸ். தோனி (28), மற்றும் கிரண் பொல்லார்ட் (25) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் அவர் இருக்கிறார். இந்த சீசன் ரஜத் படிதாருக்கு மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. இதுவரை 13 இன்னிங்ஸ்களில் 44.18 சராசரியுடன் 486 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 196.76. இதில் ஐந்து அரைசதங்கள் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 93* ஆகும். இந்த தொடரில் இதுவரை 29 ஃபோர்கள் மற்றும் 41 சிக்ஸர்களை அடித்துள்ளார். அதாவது, சராசரியாக ஒவ்வொரு 3.5 பந்துக்கும் ஒரு பவுண்டரி அடித்துள்ளார்.