Sai Sudharsan: சாய் சுதர்சன் விசித்திர ஹிட் விக்கெட்! அவுட்டா? இல்லையா? கிரிக்கெட் விதி சொல்வது என்ன?

Published : May 26, 2026, 10:50 PM IST

Sai Sudharsan: ஆர்சிபிக்கு எதிரான ஐபிஎல் குவாலிபையர் 1 போட்டியில் குஜராத் வீரர் சாய் சுதர்சன் விசித்திரமான ஹிட் விக்கெட் ஆனார். அவர் அவுட்டா? இல்லையா? கிர்க்கெட் விதிகள் சொல்வது என்ன? என்பது குறித்து பார்ப்போம்.

PREV
13
ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதல்

ஐபிஎல் 2026 தொடரில் தர்மசாலா மைதானத்தில் நடந்து வரும் 'குவாலிபையர் 1' ஆட்டத்தில் ஆர்சிபி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விறுவிறுப்பாக விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 254 ரன்கள் என்ற மெகா ஸ்கோரை எட்டியது. சிக்சர் மழை பொழிந்த ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதார் வெறும் 33 பந்துகளில் 93 ரன்கள் குவித்து மிரட்டினார். 9 சிக்சர்கள், 5 பவுண்டரி நொறுக்கினார். அவருக்குத் துணையாக விராட் கோலி மற்றும் குருணால் பாண்டியா ஆகியோர் தலா 43 ரன்கள் சேர்த்தனர். ஆர்சிபி அணி ஐபிஎல் பிளே-ஆஃப் போட்டிகளின் வரலாற்றிலேயே பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த ஸ்கோர் இதுவாகும்.

சாய் சுதர்சன் விநோதமான அவுட்

பின்பு 255 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கிய நிலையில், சாய் சுதர்சன், ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஜேக்கப் டஃபி வீசிய பந்துகளை எதிர்கொண்டு இரண்டு நேர்த்தியான பவுண்டரிகளை விளாசினார். ஜேக்கப் டஃபி வீசிய ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் முதல் பந்தை பவுண்டரி விளாசிய சாய் சுதர்சன் அடுத்த பந்தையும் பவுண்டரி விளாசினார். இதனால் குஜராத் ரசிகர்கள் துள்ளிக்குதித்த அடுத்த நொடி சாய் சுதர்சன் அவுட் என அறிவிக்கப்பட்டது. ஆம்.. பந்து பவுண்டரிக்கு சென்ற போதிலும் சாய் சுதர்சனின் பேட் அவரது கையில் இருந்து நழுவி ஸ்டெம்பில் விழுந்தது. இதனால் அவர் ஹிட் அவுட் ஆனதாக நடுவர் அறிவித்தார்.

23
சாய் சுதர்சன் ஹிட் அவுட்

அதாவது பந்தின் வேகத்தையும் திசையையும் சரியாகக் கணித்த சாய் சுதர்சன், அதை 'பாயிண்ட்' திசையில் பவுண்டரிக்கு அனுப்ப ஒரு பவர்புல் கட் ஷாட் ஆடினார். பந்தும் அவர் நினைத்தது போலவே பவுண்டரி கோட்டை நோக்கி சீறிப் பாய்ந்தது. ஆனால், ஷாட்டை முழு பலத்துடன் அடித்து முடித்த அடுத்த மைக்ரோ வினாடியில், சாய் சுதர்சனின் கைகளில் இருந்த பேட் எதிர்பாராதவிதமாக நழுவியது. கையை விட்டு நழுவிய பேட், காற்றில் சுழன்றபடி நேராக விக்கெட்டின் பின்னால் இருந்த ஸ்டம்புகளை பலமாகத் தாக்கியது. ஸ்டம்பின் மீது இருந்த பெய்ல்ஸ்கள் கீழே விழுந்தன.

சாய் சுதர்சன் அவுட்டா? இல்லையா?

9 பந்துகளில் 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சாய் சுதர்சன் இப்படி ஒரு விசித்திரமான முறையில் விக்கெட்டை பறிகொடுத்தது ஒட்டுமொத்த மைதானத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. குஜராத் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் சாய் சுதர்சன் அவுட் இல்லை. நடுவர் தவறாக அவுட் கொடுத்து விட்டதாக தெரிவித்தனர். சாய் சுதர்சன் அவுட்டா? இல்லையா? என சமூக வலைத்தளங்களில் ஆர்சிபி, குஜராத் ரசிகர்கள் யுத்தமே நடத்தி வருகின்றனர்.

33
கிரிக்கெட் விதிகள் சொல்வது என்ன?

ஆனால் கிரிக்கெட் விதி 35-ன் படி பார்த்தால் சாய் சுதர்சன் அவுட் தான். அதாவது ஒரு பேட்ஸ்மேன் பந்தை அடிக்கும் முயற்சியில் இருக்கும் போதோ அல்லது ரன் ஓடத் தொடங்கும் போதோ, அவரது உடலோ, ஆடையோ அல்லது கையில் இருக்கும் பேட்டோ ஸ்டம்பைத் தாக்கினால் அது 'ஹிட் விக்கெட்' ஆகும். அதன்படி, சாய் சுதர்சன் அடித்த பந்து பவுண்டரி லைனைத் தொட்டாலும், அவர் அவுட் என்றே நடுவர்களால் அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories