ஐபிஎல் 2026 பிளேஆஃப் பந்தயம் சூடுபிடித்துள்ளது. ஆர்சிபி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு 80% வாய்ப்பு உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் போட்டியில் உள்ளன. பஞ்சாப் அணியின் தோல்வி, கணக்குகளை மாற்றிவிட்டது.
டாப்-3 இல் கடும் போட்டி.. 80% வாய்ப்பு இந்த அணிகளுக்குத்தான்!
தற்போதைய ஐபிஎல் புள்ளிப் பட்டியலின்படி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பாதுகாப்பான இடத்தில் உள்ளன. இந்த மூன்று அணிகளும் 11 போட்டிகளில் 14 புள்ளிகளுடன் முன்னணியில் இருக்கின்றன. ஐபிஎல் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளர்களின் கணக்குப்படி, இந்த மூன்று அணிகளும் பிளேஆஃப் சுற்றுக்குச் செல்ல 80% வாய்ப்பு உள்ளது. மீதமுள்ள மூன்று போட்டிகளில் இரண்டில் வென்றால், எந்தப் பிரச்சினையும் இல்லாமல் டாப்-4 இடத்தைப் பிடித்துவிடும்.
23
சென்னை, ராஜஸ்தான் நிலைமை என்ன?
ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் தற்போது டென்ஷனில் உள்ளனர். சிஎஸ்கே அணி 11 போட்டிகளில் 12 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. வைபவ் சூர்யவன்ஷி இடம்பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் 12 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் இருக்கிறது. புள்ளிவிவரங்களின்படி, சிஎஸ்கே பிளேஆஃப் செல்வதற்கான வாய்ப்பு 42.7%, ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 41.8% உள்ளது. இந்த இரண்டு அணிகளும் தங்களது மீதமுள்ள மூன்று போட்டிகளில் குறைந்தது இரண்டில் நல்ல நெட் ரன் ரேட்டுடன் ஜெயிக்க வேண்டும். ஒரு போட்டியில் தோற்றாலும், மற்ற அணிகளின் முடிவுகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
33
பிளேஆஃப் செல்ல இதுதான் மேஜிக் நம்பர்!
ஐபிஎல் தொடரில் 10 அணிகள் வந்த பிறகு, பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற 16 புள்ளிகள் ஒரு மேஜிக் நம்பராக மாறியுள்ளது. 2022, 2023, மற்றும் 2025 சீசன்களில் 16 புள்ளிகள் பெற்ற அணிகளே நான்காவது இடத்தைப் பிடித்து பிளேஆஃப் சென்றன. 2024-ல் மட்டும் 14 புள்ளிகளுடன் நான்கு அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது, அதில் சிறந்த ரன் ரேட் அடிப்படையில் ஆர்சிபி தகுதி பெற்றது. எனவே, இந்த முறையும் 16 புள்ளிகள் எடுத்தால் மட்டுமே பிளேஆஃப் வாய்ப்பு உறுதியாகும். டெல்லி கேப்பிட்டல்ஸ் (10 புள்ளிகள்), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (9 புள்ளிகள்) அணிகளும் போட்டியில் இருந்தாலும், அவற்றுக்கு 1.2% முதல் 11% வரை மட்டுமே வாய்ப்புள்ளது. மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் ஏற்கனவே தொடரிலிருந்து வெளியேறிவிட்டன.