IPL 2026: ரசிகர்கள் எதிர்பார்த்த செய்தி வந்தாச்சு..! ஐபிஎல் மினி ஏலம் நடைபெறும் தேதி அறிவிப்பு!

Published : Nov 13, 2025, 09:42 PM IST

IPL 2026 Mini Auction Date Revealed: ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் துபாயில் நடைபெற உள்ளது. இதற்கான தேதியும் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை பார்ப்போம்.

PREV
14
ஐபிஎல் 2026 சீசன்

ஐபிஎல் 2026ம் ஆண்டுக்கான எதிர்பார்ப்பு இப்போதே தொடங்கி விட்டது. மினி ஏலத்துக்கு அதாவது நவம்பர் 15ம் தேதி மதியம் 3 மணிக்குள் ஐபிஎல் அணிகள் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதனால் அணிகள் வீரர்கள் டிரேடு பரிமாற்றத்தை தொடங்கியுள்ளன.

24
அணிகள் டிரேடு மும்முரம்

அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இருந்து ஷர்துல் தாக்கூரையும், குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் ரூதர்போர்டையும் வாங்கியுள்ளது. மேலும் சஞ்சு சாம்சன் சிஎஸ்கேவுக்கும், ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தானுக்கும் செல்வது உறுதியாகி உள்ள நிலையில், ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் எப்போது நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

34
டிசம்பர் 16ம் தேதி மினி ஏலம்

இந்த நிலையில், ஐபிஎல் 2025 சீசன் மினி ஏலம் டிசம்பர் 16ம் தேதி அன்று அபுதாபியில் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஐபிஎல் ஏலம் வெளிநாட்டில் நடைபெறுகிறது. 2024-ல் துபாயில் நடந்த ஏலம் தான் இந்தியாவிற்கு வெளியே நடந்த முதல் ஐபிஎல் ஏலம். அதைத் தொடர்ந்து, 2025 சீசனுக்கான இரண்டு நாள் மெகா ஏலம் கடந்த நவம்பரில் ஜெட்டாவில் நடைபெற்றது.

44
ஒரே நாளில் மினி ஏலம்

மெகா ஏலங்களைப் போலல்லாமல், 2026 சீசன் ஒரு மினி ஏலமாக ஒரே நாளில் முடிக்கப்படும். அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைக்கும், விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை அளித்த பின்பு தான் ஐபிஎல் இறுதி ஏலப் பட்டியலை முடிவு செய்யும். ஐபிஎல் 2025 முடிந்ததும் திறக்கப்பட்ட டிரேடிங் விண்டோ, ஏலத்திற்கு ஒரு வாரம் முன்பு வரை செயலில் இருக்கும். 

ஏலத்திற்குப் பிறகு அது மீண்டும் திறக்கப்பட்டு, ஐபிஎல் 2026 தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பு வரை திறந்திருக்கும். ஆனால் வரவிருக்கும் ஏலத்தில் வாங்கப்படும் எந்த வீரரையும் அணிகள் டிரேடு செய்ய அனுமதிக்கப்படாது.

Read more Photos on
click me!

Recommended Stories