ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கோலாகலமாக நடந்து வரும் நிலையில், சில வீரர்கள் செய்த செயல் பிசிசிஐக்கு தலைகுனிவை ஏற்படுத்தியது. அதாவது பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிக்கு எதிரான போட்டியின்போது, ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியின் கேப்டன் ரியான் பராக், டிரெஸ்ஸிங் ரூமில் இ-சிகரெட் புகைத்ததற்காக, அவரது போட்டி சம்பளத்தில் 25% அபராதமாக விதிக்கப்பட்டது. மேலும், அவருக்கு ஒரு தகுதி இழப்புப் புள்ளியும் வழங்கப்பட்டது.
மற்றொரு சம்பவத்தில், ஏப்ரல் 10 அன்று பார்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மேலாளர் ரவீந்தர் சிங் பிந்தர், டக்-அவுட் அருகே மொபைல் போன் பயன்படுத்தியதற்காக அவருக்கு ₹1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பஞ்சாப் கிங்ஸ் வீரர் யுஸ்வேந்திர சாஹலும் இ சிகரெட் பிடித்ததாக சர்ச்சை எழுந்தது.