Arshdeep Singh: டி20 போட்டிகளில் அதிக வருமானம் பெற்ற இந்திய வீரர் யார்? ரோகித் இல்லை, ஹர்திக் பாண்டியா இல்லை!

First Published | Dec 8, 2023, 4:43 PM IST

நடப்பு ஆண்டில் மட்டுமே அதிக டி20 போட்டிகளில் விளையாடி அதிக வருமானம் பெற்ற இந்திய வீரர்களின் பட்டியலில் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் முதலிடத்தில் இருக்கிறார்.

Rohit Sharma, Virat Kohli

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரைத் தொடர்ந்து இந்திய அணி விளையாடிய 5 டி20 போட்டிகளில் 4-1 என்று ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதையடுத்து தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

Hardik Pandya

வரும் 10 ஆம் தேதி இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நடக்க இருக்கிறது. டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 போட்டிகள் என்று ஒவ்வொரு போட்டிக்கும் பிசிசிஐ தரப்பிலிருந்து இந்திய வீரர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.

Tap to resize

Rohti Sharma and Virat Kohli

அதில் டெஸ்ட் கிரிக்கெட் என்றால் ஒரு போட்டிக்கு ரூ.15 லட்சம். ஒருநாள் கிரிக்கெட் என்றால் ரூ.6 லட்சம். இதுவே டி20 போட்டி என்றால் ரூ.3 லட்சம் என்று சம்பளம் வழங்கப்படும். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டில் இந்திய அணியில் டி20 கிரிக்கெட் மூலம் அதிக வருமானம் பெற்ற வீரர் யார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

Arshdeep Singh

இதில், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இந்த ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் விளையாடவில்லை. ஆகையால், அவர்கள் இருவரும் கிடையாது. சூர்யகுமார் யாதவ் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரிலும், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரிலும் இடம் பெற்று விளையாடினார்.

Asian Games 2023

இதே போன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்று விளையாடிய ஹர்திக் பாண்டியா, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் இடம் பெறவில்லை. ஆனால், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடர்களில் அர்ஷ்தீப் சிங் இடம் பெற்று விளையாடினார்.

Asian Games T20 Squad

இந்த ஆண்டில் மட்டுமே அர்ஷ்தீப் சிங் 19 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதன் மூலமாக அதிக வருமானமும் பெற்றுள்ளார். அந்த வகையில் 19 டி20 போட்டிகளில் விளையாடிய அர்ஷ்தீப் சிங் ரூ.57 லட்சம் வரையில் வருமானம் பெற்றுள்ளார். இவரைத் தொடர்ந்து டி20 போட்டி கேப்டனான சூர்யகுமார் யாதவ் 16 டி20 போட்டிகளில் விளையாடி ரூ.48 லட்சம் வரையில் வருமானம் பெற்றுள்ளார்.

Arshdeep Singh

மூன்றாவது இடத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், அக்‌ஷர் படேல் மற்றும் திலக் வர்மா ஆகியோர் இருக்கின்றனர். இவர்கள் 13 டி20 போட்டிகளில் விளையாடி ரூ.39 லட்சம் வரையில் வருமானம் பெற்றுள்ளனர்.

Arshdeep Singh T20 Match Salary

நான்காவது இடத்தில் ஹர்திக் பாண்டியா, ரவி பிஷ்னோய், இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இருக்கின்றனர். இவர்கள் 11 டி20 போட்டிகளில் விளையாடி ரூ.33 லட்சம் வரையில் வருமானம் பெற்றுள்ளனர்.

Arshdeep Singh Salary

ஐந்தாவது இடத்தில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரிங்கு சிங் இருவரும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் 10 டி20 போட்டிகளில் விளையாடி ரூ.30 லட்சம் வருமானம் பெற்றுள்ளனர். இந்த ஆண்டில் இந்திய அணி விளையாடி 20 டி20 போட்டிகளில் 14ல் வெற்றியும், 6ல் தோல்வியும் அடைந்துள்ளது.

Latest Videos

click me!