Ruturaj Gaikwad
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் இந்தியா 4-1 என்று தொடரை கைப்பற்றியது. இதையடுத்து தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடர் வரும் 10 ஆம் தேதி தொடங்குகிறது.
ICC T20I Player Ranking
இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில், இந்திய அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 5 போட்டிகளில் 0, 58, 123*, 32, 10 என்று மொத்தமாக 223 ரன்கள் எடுத்துள்ளார்.
Ruturaj Gaikwad - ICC T20I Player Ranking
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சிறப்பாக விளையாடிய கெய்க்வாட் ஐசிசி வெளியிட்ட டி20 தரவரிசைப் பட்டியலில் ஒரு பேட்ஸ்மேனாக 673 புள்ளிகளுடன் 7ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன்னதாக அவர் 79ஆவது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று பவுலிங்கில் சிறந்து விளங்கிய ரவி பிஷ்னோய் ஒவ்வொரு போட்டியிலும் தனது முதல் ஓவரிலேயே விக்கெட் கைப்பற்றினார்.
Ravi Bishnoi
இந்த தொடரில் பிஷ்னோய் விளையாடிய 5 போட்டிகளில் 9 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன் மூலமாக அவர் தரவரிசை பட்டியலில் 665 புள்ளிகளுடன் 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.