CSK Released and Retained List:மணீஷ் பாண்டே, கருண் நாயர் உள்பட 7 வீரர்களை குறி வைக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்!

First Published | Dec 6, 2023, 4:54 PM IST

துபாயில் நடக்க இருக்கும் ஐபிஎல் ஏலத்தின் போது மணீஷ் பாண்டே, கருண் நாயர் உள்ளிட்ட 7 வீரர்களை தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியானது ஏலத்தில் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Dhoni and Jadeja

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக துபாயில் வரும் 19 ஆம் தேதி ஐபிஎல் மினி ஏலம் நடக்க இருக்கிறது. இதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியிலும் தக்க வைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.

Chennai Super Kings Slots

இதில், சென்னை சூப்பர் அணி பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், பகத் வர்மா, சுப்ரன்ஷூ சேனாபதி, அம்பத்தி ராயுடு, கைல் ஜேமிசன், ஆகாஷ் சிங், சிசாண்டா மகாளா உள்பட 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Tap to resize

MS Dhoni

இதன் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ரூ.31.4 கோடி பர்ஸ் தொகையாக தக்க வைத்துக் கொண்டது. மேலும், சென்னை அணியானது 3 வெளிநாட்டு வீரர்கள் உள்பட மொத்தமாக 9 வீரர்களை ஏலத்தில் எடுக்க இருக்கிறது.

Indian Premier League

எம்.எஸ்.தோனி (கேப்டன்), மொயீன் அலி, தீபக் சாஹர், டெவான் கான்வே, துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, மதீஷா பதிரனா, அஜிங்க்யா ரகானே, ஷேக் ரஷீத், மிட்செல் சாண்ட்னர், சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலாங்கி, மதீஷ் தீக்‌ஷனா ஆகியோர் தக்க வைக்கப்பட்டனர்.

IPL 2024

தங்களது அணியில் காலியாக இருக்கும் 9 வீரர்களின் இடத்திற்கு மணீஷ் பாண்டே, கருண் நாயர் உள்ளிட்ட 7 வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஏலத்தில் எடுக்க இருக்கிறது. அது யாரெல்லாம் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Chennai Super Kings

டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடிய மணீஷ் பாண்டேயை அந்த அணி விடுவித்தது. இதன் காரணமாக இந்த ஏலத்தில் அவரை எடுப்பதற்கு சிஎஸ்கே அணியானது தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சிஎஸ்கே அணியில் அம்பத்தி ராயுடு ஓய்வு பெற்ற நிலையில், அவரது இடத்திற்கு மணீஷ் பாண்டே சரியான தேர்வாக இருப்பார் என்று கூறப்படுகிறது.

CSK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுக்கு கருண் நாயர் சரியான தேர்வாக இருப்பார். ஆகையால், அவரை ஏலம் எடுக்க சிஎஸ்கே அணி டார்க்கெட் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Chennai Super Kings

இந்தியாவில் நடந்த கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு 6ஆவது முறையாக சாம்பியன் டிராபி பெற்றுக் கொடுத்த பேட் கம்மின்ஸ் வெளிநாட்டு வீரர்களின் பட்டியலில் இடம் பெறுவார் என்று கருதப்படுகிறது.

CSK Pursue Value

ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க், சிஎஸ்கே அணிக்கு சரியான தேர்வாக இருப்பார் என்று கூறப்படுகிறது.

CSK Retained Players

மற்றொரு வெளிநாட்டு வீரரான நியூசிலாந்து அணியின் ஜிம்மி நீசம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிறந்த வேகப்பந்து வீச்சாளராக இருப்பார்.

CSK Released Players

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஷர்துல் தாக்கூர் சிஎஸ்கே அணியின் சிறந்த ஆல்ரவுண்டராக இருப்பார். 2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று ஷர்துல் தாக்கூர் விளையாடியுள்ளார்.

Gerald Goetzee

தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளரான கெரால்டு கோட்ஸி சிஎஸ்கே அணியில் இடம் பெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Latest Videos

click me!