இதுஒருபுறம் இருக்க ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா குஜராத் மாநிலத்தில் பாஜக சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். பாஜக சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் அவ்வபோது பாஜக மூத்த தலைவர்களை அவர் நேரில் சந்தித்து வருவார். அப்போது அவரது கணவரும், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரருமான ஜடேஜாவும் பெரும்பாலும் உடன் இருப்பார். இதனால் அவர் பாஜகவில் இணைகிறார், இணைகிறார் என அவ்வபோது புரளிகள் வரும்.
இந்நிலையில் ஜடேஜா தன்னை பாஜக.வில் இணைத்துக் கொண்டுள்ளார். பாஜக.வில் இணைந்ததற்கான உறுப்பினர் அடையாள அட்டையை அவரது மனைவி ரிவாபா ஜடேஜா தமது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிகாவை வீழ்த்தி சரித்திர வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியோடு டி20 போட்டிகளில் இருந்து ஜடேஜா ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.