5 வருச உழைப்பு இப்படி மண்ணா போச்சே! தரவரிசையில் டாப் 10ல் இருந்து தூக்கி அடிக்கப்பட்ட பாபர் ஆசம்

First Published Sep 5, 2024, 12:40 AM IST

தொடர்ந்து தனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பாபர் அசாம் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் 12வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

Babar Azam

2019 டிசம்பரில், பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பேட்ஸ்மேன்களில் 13வது இடத்தில் இருந்தார். சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, பாபர் டெஸ்ட் தரவரிசையில் முதல் 10 பேட்ஸ்மேன்களில் இடம்பிடிக்கவில்லை. சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பாபர் அசாம் 12வது இடத்திற்கு சரிந்துள்ளார். 

Babar Azam

முன்னதாக 9வது இடத்தில் இருந்தார். அங்கிருந்து தற்போது 12வது இடத்திற்கு சரிந்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர் சிறப்பாக செயல்படவில்லை. இம்முறை சொந்த மண்ணில் வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் அவர் சிறப்பாக செயல்படவில்லை. வங்கதேச அணிக்கு எதிரான நான்கு இன்னிங்ஸ்களில் பாபர் 64 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனாலேயே டெஸ்ட் தரவரிசையில் பின்தங்க நேரிட்டது.

Latest Videos


டெஸ்ட் கிரிக்கெட்டில் 2022 டிசம்பருக்குப் பிறகு இதுவரை சதம் அடிக்கவில்லை பாபர். டெஸ்டில் கடந்த 16 இன்னிங்ஸ்களில் ஒருமுறை கூட அவர் அரைசதம் அடிக்கவில்லை. இந்த புள்ளிவிவரங்களே டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் மிகவும் மோசமான ஃபார்மில் இருப்பதை தெளிவுபடுத்துகிறது. 

சொந்த மண்ணில் வங்கதேச அணிக்கு எதிராக கூட இவர் பெரிய ரன்களை எடுக்கவில்லை. இதன் தாக்கம் ஐசிசி தரவரிசையில் பிரதிபலித்தது. பாபரின் மோசமான ஃபார்ம் பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Joe Root

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இங்கிலாந்தின் ஜோ ரூட் முதலிடத்தில் உள்ளார். ரூட் 922 ரேட்டிங் புள்ளிகளைப் பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தில் உள்ள கேன் வில்லியம்சனை விட 63 புள்ளிகள் முன்னிலையில் ரூட் உள்ளார். 

Virat Kohli

2022 ஜூலையில் எட்ஜ்பாஸ்டனில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த பிறகு, இங்கிலாந்து பேட்ஸ்மேன் 923 ரேட்டிங் புள்ளிகளைப் பெற்றார். அதுதான் அவரது சிறந்த ரேட்டிங் புள்ளி. இப்போது ரூட் அந்த புள்ளியை நெருங்கிவிட்டார். ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் மற்றும் விராட் கோலி ஆகியோர் முறையே 6, 7 மற்றும் 8வது இடங்களில் உள்ளனர்.

click me!