Imran Tahir T20 Record: ஐபிஎல் 2023ல் தோனி படைத்த சாதனையை முறியடித்த முன்னாள் சிஎஸ்கே வீரர் இம்ரான் தாஹீர்

First Published | Sep 4, 2024, 5:56 PM IST

தென் ஆப்பிரிக்காவின் இம்ரான் தாஹீர் டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். 45 வயதில் கேப்டனாக களமிறங்கி டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக பொறுப்பேற்ற அதிக வயதான வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

MS Dhoni

அதிக வயதான கேப்டன் என்ற சாதனையை தென் ஆப்பிரிக்காவை இம்ரான் தாஹீர் படைத்துள்ளார். அதிக வயதான கேப்டன்களின் பட்டியலில் சிஎஸ்கே வீரர் எம்.எஸ்.தோனியும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் கிரிக்கெட்டை தவிர வேறு எந்த விளையாட்டுக்கும் இல்லாத வகையில் ரசிகர்கள் இருக்கிறார்கள். மற்ற விளையாட்டுகளை விட கிரிக்கெட் விளையாடவே கோடிக்கணக்கான ரசிகர்கள் விரும்புகின்றனர்.

Oldest Captain in T20 Cricket

அந்தளவிற்கு கிரிக்கெட் ரசிகர்களை ஈர்த்துள்ளது. இதில், என்ன ஆச்சரியம் என்றால் வயதான காலத்திலும் கூட கிரிக்கெட் திறமையை வெளிப்படுத்துகிறது. அப்படி என்ன திறமையை வெளிப்படுத்தியிருக்கிறது என்று கேட்டால், அது வேறு ஒன்றுமில்லை, ஒரு வீரரை கேப்டனாக மாற்றியிருக்கிறது. அது யார்? ஏன், என்று பார்க்கலாம் வாங்க.

Tap to resize

MS Dhoni Oldest Captain in T20

கிரிக்கெட்டில் இளம் பருவத்தில் ஒரு வீரர் கேப்டனாக பொறுப்பு ஏற்பது என்பது ஆச்சரியமில்லை. ஆனால், வயதான காலத்தில் ஒரு வீரர் கேப்டனாக பொறுப்பேற்று அணிக்கு வெற்றி தேடிக் கொடுப்பது தான் சுவாரஸ்யம். அப்படி ஒரு சுவாரஸ்யத்தை தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஸ்பின்னர் இம்ரான் தாஹீர் கொடுத்துள்ளார்.

Chennai Super Kings - IPL 2025

ஆண்டிகுவாவில் கரீபியன் பிரீமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரானது வரும் அக்டோபர் 6ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. கரீபியன் லீக் தொடரில் ஆண்டிகுவா மற்றும் பர்புடா பால்கன்ஸ், பார்படாஸ் ராயல்ஸ், செயிண்ட் லூசியா கிங்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ் உள்பட 6 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன.

Shane Warne

இந்த கரீபியன் பிரிமீயர் லீக் தொடரில் சிஎஸ்கே முன்னாள் வீரரும், தென் ஆப்பிரிக்காவின் ஸ்பின்னருமான இம்ரான் தாஹீர் டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்துள்ளார். மேலும், 45 வயதில் கேப்டனாக களம் இறங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக பொறுப்பேற்ற அதிக வயதான வீரர் என்ற சாதனையை இம்ரான் தாஹீர் படைத்துள்ளார்.

Guyana Amazon Warriors in T20 Cricket

தற்போது நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் கயானா அமேசான் வாரியஸ் அணியின் கேப்டனாக இம்ரான் தாஹீர் இடம் பெற்றுள்ளார். இதன் மூலமாக டி20 கிரிக்கெட்டில் அணியை வழிநடத்தும் அதிக வயதான கேப்டன் என்ற பெருமையை பெற்றார். இதற்கு காரணம் அவருக்கு தற்போது வயது 45.

Caribbean Premier League

இம்ரான் தாஹீருக்கு முன்னதாக இந்த சாதனைக்கு ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஷேன் வார்னே சொந்தக்காரராக இருந்தார். 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற பிக் பாஷ் லீக் தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டனாக வார்னே இருந்தார். அப்போது அவருக்கு 43 வயது, ​​115 நாட்கள்.

Caribbean Premier League - Imran Tahir

இம்ரான் தாஹீருக்கு முன்னதாக இந்த சாதனையை தோனி பெற்றிருந்தார். ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனி ஒரு அணியை வழிநடத்தும் அதிக வயதான கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார். 41 வயதான தோனி 2023 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியை வழிநடத்தி இந்த சாதனையை தனதாக்கியிருந்தார். ஆனால், தோனியின் இந்த சாதனையை முன்னாள் சிஎஸ்கே வீரர் இம்ரான் தாஹீர் முறியடித்துள்ளார்.

Latest Videos

click me!